ஒலிம்பிக்: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி

By செய்திப்பிரிவு

ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இதுவரை இந்தியாவில் இருந்து விளையாட 95 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொள்ள உள்ளனர். அதன் விவரம்:

வில்வித்தை: ஆடவர் வில் வித்தையில் ரீகர்வ் தனிநபர் பிரிவில் தருண்தீப் ராய், அட்டானு தாஸ், பிரவீன் ஜாதவ் பங்கேற்கின்றனர். அணிகள் பிரிவில் இவர்கள் கூட்டாக களமிறங்குகின்றனர். மகளிர் தனிநபர் ரீகர்வ் பிரிவில் தீபிகா குமாரி கலந்து கொள்கிறார்.

தடகளம்: நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் (ஆடவர் ஈட்டி எறிதல்), பாவ்னா (மகளிர் 20 கி.மீ நடை பந்தயம்), இர்பான் தோடி (ஆடவர் 20 கி.மீ. நடை பந்தயம்), மொகமது அனாஸ், வி.கே.விஷ்மயா, நிர்மல் நோவா, ஜிஷ்னா மேத்யூ ( 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம்), அவினாஷ் சேபிள் (ஆடவர் 3000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ்), சந்தீப் குமார் ( ஆடவர் 20 கி.மீ. நடை பந்தயம்), பிரியங்கா கோஷ்வாமி (மகளிர் 20 கி.மீ. நடை பந்தயம்), ராகுல் (ஆடவர் 20 கி.மீ. நடை பந்தயம்), எம்.ஸ்ரீசங்கர் (ஆடவர் நீளம் தாண்டுதல்), கமல்பிரீத் கவுர் (மகளிர் வட்டு எறிதல்).

குத்துசண்டை: சதீஷ் குமார் (ஆடவர் 91 கிலா), ஆஷிஸ் குமார் (ஆடவர் 74 கிலோ), லோவ்லினா போர்கோஹெய்ன் (மகளிர் 69 கிலோ), விகாஷ் கிருஷ்ணன் (ஆடவர் 69 கிலோ), பூஜா ராணி (மகளிர் 75 கிலோ), அமித் பங்கால் (ஆடவர் 52 கிலோ), மேரி கோம் (மகளிர் 51 கிலோ), சிம்ரன்ஜி (மகளிர் 60 கிலோ), மணீஷ் கவுசிக் (ஆடவர் 63 கிலோ).

குதிரையேற்றம்: பவுத் மிர்சா (ஆடவர் தனிநபர் பிரிவு)

வாள்வீச்சு: பவானி தேவி (மகளிர் சேபர்)

ஜிம்னாஸ்டிக்: பிரணதி நாயக் (மகளிர் ஆர்ட்டிஸ்டிக்)

ஹாக்கி: ஆடவர், மகளிர் அணி.

துடுப்பு படகு: அர்ஜுன் லால் ஜத், அர்விந்த் சிங் ( ஆடவர் லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ்)

பாய்மரபடகு: நேத்ரா குமணன் (மகளிர் லேசர் ரேடியல்), விஷ்ணு சரவணன் (ஆடவர் லேசர் ஸ்டாண்டர்டு), கே.சி.கணபதி, வருண் தாக்குர் (ஆடவர் ஸ்கீப் 49இஆர்)

துப்பாக்கிச் சுடுதல் (தனிநபர் பிரிவு): அஞ்சும் மவுத்கில், தேஜஸ்வினி சாவந்த், அபூர்வி சண்டிலா, இளவேனில் வாளறிவன், மனு பாகர், யஷஸ்வினி தேஸ்வால், ராகி சர்னோபாத், திவ்யானேஷ் பன்வார், சஞ்ஜீவ் ராஜ்புத், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, தீபக் குமார், அங்கத் வீர் சிங் பஜ்வா, மைராஜ் அகமது கான்.

(கலப்பு அணிகள் பிரிவு): திவ்யானேஷ் சிங் பன்வார், இளவேனில் வாளறிவன் மற்றும் தீபக் குமார், அஞ்சும் மவுத்கில். சவுரப் சவுத்ரி, மனு பாகர் மற்றும் அபிஷேக் வர்மா, யஷஸ்வினி சிங் தேஸ்வால்.

டேபிள் டென்னிஸ்: அச்சந்தா ஷரத் கமல் (ஆடவர் ஒற்றையர்), சத்தியன் ஞானசேகரன் ( ஆடவர் ஒற்றையர்), மணிகா பத்ரா (மகளிர் ஒற்றையர்), சுதிர்தா முகர்ஜி (மகளிர் ஒற்றையர்). அச்சந்தா ஷரத் கமல், மணிகா பத்ரா (கலப்பு இரட்டையர் பிரிவு).

மல்யுத்தம்: ரவி தகியா, பஜ்ரங் புனியா, தீபக் புனியா, வினேஷ் போகத், அன்ஷு மாலிக் (மகளிர் 57 கிலோ), சோனம் மாலிக் (மகளிர் 62 கிலோ), சுமித் மாலிக் (ஆடவர் 125 கிலோ), சீமா பிஸ்லா (மகளிர் 50 கிலோ).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்