கரோனாவில் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே பயிற்சியாளர்கள் மைக் ஹசி, பாலாஜி ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வருகின்றனர்

By பிடிஐ


கரோனாவில் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல் பாலாஜி ஆகிய இருவரும் விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் 14-வது சீசன் ஐபிஎல் தொடர் மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட்டது. வீரர்களுக்கு பல அடுக்கு பரிசோதனை, தனிமைப்படுத்துதல் என பாதுகாப்பான முறையில் இருந்து விளையாடினார்.

ஆனால், இந்தியாவில் நிலவும் கரோனா வைரஸ் 2-வது அலை, ஐபிஎல் பயோபபுளுக்குள் புகுந்தது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர் வருண் சக்ரவர்த்தி, வாரியர், சன்ரைசர்ஸ் வீரர் விருதிமான் சாஹா, டெல்லி வீரர் அமித் மிஸ்ரா, சிஎஸ்கே பயிற்சியாளர்கள், மைக் ஹசி, பாலாஜி ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து, ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டுவீரர்களும் தங்கள் தாய்நாட்டுக்கு புறப்பட்டனர்

இந்நிலையில் கரோனாவில் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே பயிற்சியாளர்கள் மைக் ஹசி, எல்.பாலாஜி ஆகியோர் டெல்லியிலிருந்து விமான ஆம்புலன்ஸ் மூலம் இன்று சென்னை அழைத்துவரப்பட்டனர். இங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட உள்ளது.

மைக் ஹசி

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில் “ மைக் ஹசி, பாலாஜி இருவரையும் விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வர முடிவு செய்துள்ளோம். இங்கு சிறந்த மருத்துவமனைகளுடன் தொடர்பு இருப்பதால், இங்கு சிகிச்சை அளிக்கப்படும்.

இருவருக்கும் அறிகுறியில்லாத கரோனா என்பதால், நலமாக உள்ளனர். மைக் ஹசி, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வரும்வரை இந்தியாவில்இருக்கவேண்டும். அதன்பின் தனி விமானத்தில் அவர் ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்படுவார். ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு சென்று அங்கிருந்து ஆஸ்திேலியா புறப்படுகின்றனர்.

சிஎஸ்ேக அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவிட்டு இன்று பிற்பகலில் தோனி, ராஞ்சி புறப்படுகிறார்” எனத் தெரிவித்தாார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்