ஷேன் வார்னின் சிறந்த இந்திய டெஸ்ட் அணியில் சேவாக், சச்சின், கங்குலி; லஷ்மண் 12-வது வீரர்

By பிடிஐ

ஷேன் வார்ன் அறிவித்த தலைசிறந்த இந்திய டெஸ்ட் அணியில் சச்சின், சேவாக், கங்குலி ஆகியோர் இடம்பெற வி.வி.எஸ்.லஷ்மணுக்கு 12-வது வீரர் இடமளிக்கப்பட்டுள்ளது.

கபில்தேவ், மகேந்திர சிங் தோனி ஆகியோரும் ஷேன் வார்னின் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அணிகளின் சிறந்த டெஸ்ட் அணிகளை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வரும் ஷேன் வார்ன், இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் அணியை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதாவது தான் எதிர்கொண்ட, பார்த்த வீரர்கள் என்ற அடிப்படையில் இந்த அணியை ஷேன் வார்ன் தேர்வு செய்துள்ளார்.

தொடக்க வீரர்களாக சேவாக், நவ்ஜோத் சிங் சித்து தேர்ந்தெடுக்கப்பட, சச்சின் டெண்டுல்கரை தனது புகழ்பெற்ற 4-ம் நிலையிலையே தக்கவைத்தார் ஷேன் வார்ன். 3-ம் நிலையில் இந்தியாவின் சுவர் ராகுல் திராவிட்.

6-ம் நிலையில் இறங்க அசாருதீனா, லஷ்மணா என்று தனக்கு குழப்பம் ஏற்பட்டது என்றும் ஆனால் அசாருதீனை அதற்கு தேர்வு செய்திருப்பதாகவும் லஷ்மண் 12-வது வீரராக சேர்க்கப்பட்டாலும் அந்த நாளில் 12-வது வீரரை தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் தான் சிந்தித்ததாகவும் அவர் கூறினார்.

“நான் தேர்வு செய்த அணிகளில் இந்திய அணிதான் கடினமானது, வெங்சர்க்கார், சஞ்சய் மஞ்சுரேக்கர், ரவி சாஸ்திரி, மனோஜ் பிரபாகர், ஆகியோருடன் ஜாகீர் கானும் பரிசீலனையில் இருந்தனர்” என்றார்.

பந்து வீச்சு வரிசையில் அனில் கும்ளே, ஹர்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத், கபில்தேவ் ஆகியோர் உள்ளனர்.

ஷேன் வார்ன் அறிவித்த தலைசிறந்த இந்திய டெஸ்ட் அணி வருமாறு:

சேவாக், சித்து, திராவிட், சச்சின், கங்குலி, அசாருதீன், கபில்தேவ், தோனி, அனில் கும்ளே, ஹர்பஜன் சிங் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத், விவிஎஸ். லஷ்மண் 12-வது வீரர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்