ரஞ்சி கோப்பையில் தமிழகம் வெற்றி

By செய்திப்பிரிவு

ரஞ்சி கோப்பை பி பிரிவில் தமிழகம்-ரயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழகம் 328 ரன்கள் குவித்தது.

பாபா இந்திரஜித் 151 ரன் எடுத்தார். ரயில்வேஸ் தரப்பில் அனுரீத் சிங் 5 விக்கெட் வீழ்த் தினார். தொடர்ந்து ஆடிய ரயில் வேஸ் அணி முதல் இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ-ஆன் ஆனது. செலுவராஜ் 66, கோஷ் 48 ரன் எடுத்தனர். தமிழகம் தரப்பில் அஸ்வின் கிறிஸ்ட் 6 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய ரயில்வேஸ் 3வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. செலுவராஜ் 80, ரவாட் 77 ரன்னு டன் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். செலுவ ராஜ் 88, ரவாட் 78 ரன்களில் வெளி யேறினர். அதன் பின்னர் வந்த பீமா ராவ் 11, அனுரீத் சிங் 1, உபாத்யாய் 0, ஜோனாதன் 18 ரன்களில் ஆட்டமிழக்க முடிவில் 88.2 ஓவரில் 240 ரன்களுக்கு ரயில்வேஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தமிழகம் தரப்பில் ரஹில் ஷா 4, ரங்கராஜன், கவுசிக் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 77 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய தமிழகம் 23.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. தினேஷ்கார்த்திக் 43, அபிநவ் முகுந்த் 8 ரன்னில் ஆட்டமிழந்தனர். பாபா அபராஜித் 10, சங்கர் 3 ரன்கள் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது பாபா இந்திரஜித்துக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் தமிழக அணிக்கு 6 புள்ளிகள் கிடைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

55 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்