விளையாட்டாய் சில கதைகள்: இந்திய அணியின் இளம் கீப்பர்

By பி.எம்.சுதிர்

மிகக் குறைந்த வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியின்விக்கெட் கீப்பராக பொறுப்பேற்ற பார்த்தீவ் படேலின் பிறந்தநாள் இன்று (மார்ச் 9).

1985-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி அகமதாபாத் நகரில் பிறந்த பார்த்தீவ் படேல், 2002-ம் ஆண்டில் மிகச் சிறிய வயதில் (17 வயது) இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியின் அப்போதைய விக்கெட் கீப்பரான அஜய் ரத்ராவுக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்போது பார்த்தீவ் படேலுக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டியில் ரன்களை எடுக்காமல் சொதப்பியபோதிலும், அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக ஆடி ரசிகர்களைக் கவர்ந்தார் பார்த்தீவ் படேல். ஒருசில போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகவும் ஆடி இந்தியாவுக்காக ரன்களைக் குவித்தார். குழந்தை முகம் கொண்டவரான பார்த்தீவ் படேல், இந்திய அணிக்காக மட்டுமின்றி, உள்ளூர் போட்டிகளில் குஜராத் அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2007-ம் ஆண்டில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த 5 போட்டிகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்துவந்தார். ஆனால் அந்த நேரத்தில் பெரும் புயலைப்போல் மகேந்திரசிங் தோனி வந்ததால், இந்திய அணியில் பார்த்தீவ்வின் இடம் பறிபோனது.

இந்திய அணியில் இடம் பறிபோன நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்திய பார்த்தீவ், ஆரம்ப கட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்தார். இதைத்தொடர்ந்து கொச்சி டஸ்கர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்