விளையாட்டாய் சில கதைகள்: டென்னிஸ் பாதி; மாடலிங் பாதி

By பி.எம்.சுதிர்

கடந்த வாரம் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியனாக மகுடம் சூடியுள்ள நவோமி ஒசாகா, ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் வளர்ந்தது, பயிற்சி பெற்றது எல்லாமே அமெரிக்காவில்தான். ஒசாகாவின் தாய் ஜப்பான் நாட்டையும், தந்தை ஹைட்டி நாட்டையும் சேர்ந்தவர்கள்.

ஒசாகாவுக்கு 3 வயதாக இருக்கும்போது அவரது தந்தை, லியனார்ட் பிரான்கோயிஸ் அவருக்கு டென்னிஸ் பயிற்சியை அளிக்கத் தொடங்கியுள்ளார். இந்த விளையாட்டில் ஒசாகாவுக்கு பெரிய அளவில் எதிர்காலம் இருப்பதை உணர்ந்த அவர், பின்னர் விம் ஃபிசெட் என்ற பயிற்சியாளரிடம் ஒசாகாவை சேர்த்துள்ளார். சிமோனா ஹாலெப், கிம் கிளிஸ்டர்ஸ், ஏஞ்சலிக் கெர்பர் போன்ற வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்தவர் விம் ஃபிசெட் என்பது குறிப்பிடத்தக்கது.

2018-ம் ஆண்டு, தனது 20-வது வயதில் முதல் கிராண்ட் ஸ்லாம் (அமெரிக்க ஓபன்) பட்டத்தை ஒசாகா வென்றுள்ளார். இந்த தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸை அவர் வீழ்த்தினார்.

டென்னிஸ் போட்டிகளுக்கு இணையாக வீடியோ கேம்ஸ்களையும் நேசிக்கிறார் ஒசாகா. தினந்தோறும் 4 மணிநேரம் டென்னிஸ் பயிற்சிபெறும் ஒசாகா, அதன் பிறகு தினந்தோறும் 4 மணிநேரம் வீடியோ கேம்ஸ் ஆடுவாராம். அத்துடன் மாடலிங்கிலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.

பல மாடலிங் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். கடந்த ஆண்டு, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது தனது சகோதரியுடன் சேர்ந்து வடிவமைத்த முகக்கவசங்களை அணிந்து அவர் போட்டிகளில் ஆடினார். இதில் ஒவ்வொரு முகக் கவசத்துக்கும், அமெரிக்காவில் நிறவெறியால் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை வைத்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்