விளையாட்டாய் சில கதைகள்: குருவின் பாதையில் நடைபோடும் சீடன்

By பி.எம்.சுதிர்

ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றுகொடுத்த மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 26).

ஹரியாணாவில் உள்ள குந்தன் கிராமத்தின் ஏழ்மையான குடும்பத்தில் 1994-ம் ஆண்டில் பிறந்தவர் பஜ்ரங் பூனியா. அவரது ஊரில் மல்யுத்த வீரர்கள் பலர் உருவாகி சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று கொடுத்துள்ளனர். அவர்களின் வரிசையில் தன் மகன்களான பஜ்ரங் பூனியாவையும், ஹரீந்தரையும் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் அவரது தந்தை பல்வான் சிங் பூனியா.

பஜ்ரங்குக்கு 7 வயது இருக்கும்போதே அவரது அண்ணன் ஹரீந்தருடன் உள்ளூரில் மல்யுத்த பயிற்சி அளிக்கும் அகாடாக்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார் பல்வான் சிங். மல்யுத்தத்தைவிட இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வாழும் வசதியான வாழ்க்கை பஜ்ரங்கை கவர்ந்துள்ளது. இதனால் சிறுவயதிலேயே அவருக்கு மல்யுத்தத்தின் மீது காதல் பிறந்துள்ளது.

அகாடாக்களில் அடிக்கடி மல்யுத்த போட்டிகள் நடக்கும். இதில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்ததால், டெல்லியில் உள்ள சத்ராசால் மையத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு பஜ்ரங் பூனியாவுக்கு கிடைத்துள்ளது. அங்கிருந்த மூத்த வீரரான யோகேஸ்வர் தத்துக்கு அவரை மிகவும் பிடித்துவிட, தன் தம்பியைப் போலவே அவர் மீது பாசம் காட்டத் தொடங்கினார். பிற்காலத்தில் யோகேஸ்வர் தத்தையே தனது முக்கிய பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துக்கொண்டார் பஜ்ரங்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான யோகேஸ்வர் தத், மல்யுத்தத்தில் பல நுணுக்கங்களை பஜ்ரங்குக்கு கற்றுக்கொடுத்தார். அதைப் பயன்படுத்தி ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு என பல்வேறு சர்வதேச போட்டிகளில் அவர் பதக்கங்களைக் குவித்துள்ளார். தன் குருநாதரைப் போலவே ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவுடன் தற்போது பயிற்சி பெற்று வருகிறார் பஜ்ரங் பூனியா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்