3-வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்றது இங்கிலாந்து அணி;இந்திய அணியில் 2 மாற்றங்கள்: ஆடுகளம் எப்படி?

By செய்திப்பிரிவு


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிராக பகலிரவாக நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், டி20, ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் சென்னையில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இதனால் இன்று தொடங்கும் 3-வது டெஸ்ட போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் மாதம் நடைபெறஉள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் மோதும் அணி இந்தியாவா, இங்கிலாந்து அணியா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளுக்கும் வெற்றி தேவை என்பதால், பரபரப்பு அதிகரித்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முகமது சிராஜுக்கு பதிலாக பும்ராவும், குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் அணிக்குள் வந்துள்ளனர்.
இங்கிலாந்து அணயில் ரோரி பர்ன்ஸ, லாரன்ஸ், ஸ்டோன், மொயின் அலி ஆகியோருக்கு பதிலாக, ஆன்டர்ஸன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, கிராலே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆடுகளம் எப்படி

மொட்டீரா ஆடுகளத்தில் 7 ஆண்டுகளுக்கு முதல்முறையாக சர்வதேச போட்டி நடக்கிறது. ஆடுகளம் நன்றாக காய்ந்திருப்பதால், பேட்டிங்கிற்கும் , வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும். பிங்க் பந்து பெரும்பாலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமா இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் பெய்யும் பனி பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சிரமத்தை கொடுக்கலாம். முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் நன்கு ஒத்துழைக்கும். ஆடுகளம் காய்திருப்பதைப் பார்த்தால் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆனால், இந்திய அணியில் சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது .

ஆடுகளம் குறித்து கோலி கூறுகையில் “ நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங் செய்திருப்போம். ஆடுகளம் நன்றாக காய்திருக்கிறது. பயிற்சி ஆட்டத்தில் இருந்த ஆடுகளம் நன்றாக இருந்தது. இரவு நேரத்தில் வெளிச்சம்தான் கவலையாக இருக்கிறது. துபாயில் இதேபோன்ற ஆடுகளத்தில் விளையாடும் போது , ரிங் ஆப் ஃபயர் விளக்கால் பீல்டர்கள் சிரமங்களைச் சந்தித்தனர். சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் தேவை என்பதால், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசிவரை ரன் சேர்க்கும் வீரர்கள் தேவை” எனத் தெரிவித்தார்.

இந்திய அணி விவரம்:
ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், சத்தேஸ்வர் புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே, ரிஷப் பந்த், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா
இங்கிலாந்து அணி விவரம்
டாம் சிப்ளி, ஜானி பேர்ஸ்டோ, ஜாக் கிராலே, ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஒலே போப், பென் ஃபோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜேக் லீச், ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்