ஐபிஎல் தொடரில் 2-ம் தர ஆஸி. வீரர்களால் நியூஸி. வீரர்கள் எப்போதுமே கண்டுகொள்ளப்படவில்லை: சைமன் டோல் சீண்டல்

By பிடிஐ

ஐபிஎல் தொடரில் இரண்டாம் தர ஆஸ்திரேலிய வீரர்களால் எப்போதுமே நியூஸிலாந்தின் திறமையான வீரர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லைஎன்று நியூஸிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும் வர்ணனையாளருமான சைமன் டோல் கிண்டலான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாச்தில் வென்றது. இதில் நியூஸிலாந்து அணி வீரர் கான்வே அதிரடியாக ஆடி 59 பந்துகளில் 99 ரன்கள் சேரத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நியூஸிலாந்தில் குடியேறிய கான்வே 79 நிமிடங்கள் களத்தில் நங்கூரமிட்ட கான்வே 10பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசினார்.

29வயதான கான்வே, தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிறந்து, வளர்ந்து, அங்கு கிரிக்கெட் விளையாடி, கடந்த 2017ம் ஆண்டுதான் நியூஸிலாந்தில் கான்வே குடியேறினார்.

நியூஸிலாந்து அணிக்குள் அறிமுகமாகிய கான்வே, டி20 போட்டிகளில் தொடர்ந்து அடிக்கும் 5-வது அரைசதம் நேற்றைய ஆட்டத்தில். இதற்கு முன் 93, 91, 69, 50 ரன்கள் என 5 போட்டிகளில் கான்வே அடித்துள்ளார்.

கான்வேயின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்த இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " டிவன் கான்வே, 4 நாட்கள் தாமதமாக அடித்துவிட்டீர்களே ஆனாலும், என்ன அடி.." எனப் பாராட்டியுள்ளார்.

இதில் நியூஸி வீரர் கான்வே ஐபிஎல் ஏலத்தில் தன்னை பதிவு செய்திருந்தார். அடிப்படைவிலையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஆனால், ஏலம் நடந்து முடிந்த 4 நாட்களில் நடந்த ஆஸி.க்கு எதிரான டி20 போட்டியில் கான்வே காட்டடி அடித்து அனைவரையும் திகைக்கவைத்துள்ளார். இப்படிப்பட்ட வீரரையா ஏலத்தில் தவறவிட்டோம் என ஐபிஎல் அணிகளை சிந்திக்க வைத்துள்ளார்.

சைமன் டோல்

, கான்வேயின் ஆட்டம் குறித்து நியூஸிலாந்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சைமன் டோல் ட்விட்டரில் தெரிவித்த கருத்தில் " ஐபிஎல் தொடரில் 2-ம் தர ஆஸ்திரேலிய வீரர்களால் நியூஸிலாந்தின் திறமையான வீரர்கள் தொடர்ந்து கண்டுகொள்ளப்படுவது இல்லை.

நான் எந்த வீரரையும் குறிப்பிடவில்லை. ஆதலால் ட்ரால் செய்வதை நிறுத்துங்கள். ஐபிஎல் தொடங்கியதிலிருந்து 94 ஆஸ்திரேலிய வீரர்கள் ரூ.886 கோடிக்கு ஏலம் போயுள்ளார்கள். ஆனால், 31 நியூஸிலாந்து வீரர்கள் ரூ.212 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளிலும் 6 முதல்தர அணிகள் இருக்கின்றன, டி20 அணிகளும் இருக்கின்றன. பிக்பாஷ் லீக் பார்ப்பதும், நேரமும் அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

14-வது ஐபிஎல் ஏலத்தில் நியூஸிலாந்து வீரர் கைல் ஜேமிஸன் ரூ.15 கோடிக்கு ஆர்சிபி அணியாலும், மும்பை இந்தியன்ஸ் அணியால் ஆடம் மில்னி ரூ.3.2 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்