விளையாட்டாய் சில கதைகள்: உலகின் முதல் விளையாட்டு உபகரணம்

By பி.எம்.சுதிர்

ஹாக்கி விளையாட்டைப் பொறுத்தவரை, வீரர்கள் கைகளாலோ, கால்களாலோ பந்தை தொடக்கூடாது. ஹாக்கி ஸ்டிக் மூலமாகத்தான் பந்தை கோல் எல்லையை நோக்கி நகர்த்த வேண்டும். அந்த வகையில் ஹாக்கி விளையாட்டுக்கு முக்கியத் தேவையாக ஹாக்கி ஸ்டிக்குகள் விளங்குகின்றன.

உலகிலேயே முதலில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு உபகரணம் ஹாக்கி ஸ்டிக்காக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எகிப்து நாட்டின் குகைகளில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்களில் ஹாக்கி ஸ்டிக்கின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதே இதற்கு ஆதாரமாக கூறப்படுகிறது. ஆரம்ப கட்டங்களில் மூங்கில் மரங்களைக் கொண்டு ஹாக்கி ஸ்டிக்குகள் உருவாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதன்பிறகு காலம் மாறத் தொடங்கியதும், மூங்கிலைக் கொண்டு ஹாக்கி ஸ்டிக்குகளை உருவாக்குவதற்கு பதிலாக மல்பெரி அல்லது ஹிக்கரி மரத் துண்டுகளைக் கொண்டு ஹாக்கி ஸ்டிக்குகள் உருவாக்கப்பட்டன. தற்போது ஹாக்கி போட்டிகளில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்குகள் பெரும்பாலும் இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ தயாரிக்கப்படுகின்றன. பிரம்புகள், மல்பெரி உள்ளிட்டவை மட்டுமின்றி . ஃபைபர் கிளாஸைக் கொண்டும் நவீன ஹாக்கி ஸ்டிக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

ஹாக்கி ஸ்டிக்குகளின் நீளம் பெரும்பாலும் 89 சென்டிமீட்டர் முதல் 105 சென்டிமீட்டர்கள் வரை இருக்கும். இவற்றின் எடை 560 கிராம்களைக் கொண்டதாக இருக்கும். ஹாக்கி ஸ்டிக்குகளைப் பொறுத்தவரை, அவை ஹெட், ஹாண்டில் மற்றும் ஸ்பிளைஸ் ஆகிய 3 பாகங்களைக் கொண்டுள்ளது. இதில் ஹாண்டில் பகுதி, வீரர்கள் ஹாக்கி ஸ்டிக்குகளைப் பிடிக்கும் பகுதியாகும். வளைந்திருக்கும் ஹெட் பகுதியால் வீரர்கள் பந்தை அடிப்பார்கள். ஸ்பிளைஸ் பகுதியானது இந்த இரு பகுதிகளையும் இணைக்கும் பகுதியாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 mins ago

தமிழகம்

44 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்