டெஸ்ட் சாம்பியன்ஷிப்; முதலிடத்தில் இந்திய அணி; ஆஸி. நிலைமை பரிதாபம்: பைனலுக்கு முன்னேறுவதில் சிக்கல்

By பிடிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தொடர்ந்து 2-வது முறையாக இந்திய அணி வென்ற நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை இழந்ததையடுத்து, முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பிரிஸ்பேனில் நடந்த 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சாம்பியன்ஷிப் தரவரிசையில் 430 புள்ளிகளுடன், 71.7 சதவீத வெற்றியுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை இந்திய அணி 5 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. போட்டிகள் கணக்கில் 9 வெற்றிகளும், 3 தோல்விகளும், ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.

நியூஸிலாந்து அணி 420 புள்ளிகளுடன், 70 சதவீத வெற்றிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 332 புள்ளிகளுடன், 69.2 சதவீத வெற்றிகளுடன் 3-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இங்கிலாந்து அணி 352 புள்ளிகளுடன், 65.2 சதவீத வெற்றிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. 5-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணி 144 புள்ளிகளுடன், 40 சதவீத வெற்றிகளுடன் உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றாலே ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட முடியும்.

அதேசமயம், தற்போது இங்கிலாந்து அணி, இலங்கையில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இலங்கை அணியை 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 எனக் கைப்பற்றினால் நியூஸிலாந்து அணியின் 2-வது இடத்தை இங்கிலாந்து அணியால் பிடிக்க முடியும்.

அதேசமயம், ஆஸ்திரேலிய அணிக்கு இனி தென் ஆப்பிரிக்க அணியுடன் மட்டும் ஒரு டெஸ்ட் தொடர் இருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்கா செல்வதில் கரோனா தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2-வது இடத்துக்கு முன்னேற இன்னும் 89 புள்ளிகள் தேவை. அது தென் ஆப்பிரிக்கத் தொடரில்தான் கிடைக்கும். வரும் மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸி. அணி விளையாடத் திட்டமிட்டுள்ளது. அந்தத் தொடரில் 2 போட்டிகளை வென்று, ஒரு போட்டியை ஆஸ்திரேலியா டிரா செய்தால், 93 புள்ளிகள் கிடைக்கும். இதன் மூலம் 2-வது இடத்துக்கு முன்னேறலாம்.

ஒருவேளை தென் ஆப்பிரிக்கத் தொடர் கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டால், பைனலுக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும்.

நியூஸிலாந்து அணிக்கு இனிமேல் எந்த டெஸ்ட் தொடரும் இல்லை என்பதால், தற்போது 70 சதவீத வெற்றிகளுடன் இருக்கும் நியூஸிலாந்து அணியின் 2-வது இடம் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியைப் பொறுத்து மாறுபடலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்