விவரிக்க வார்த்தைகள் இல்லை;20 விக்கெட்டை வீழ்த்துவது சாதாரண விஷயம் அல்ல: ரஹானே புகழாரம்

By பிடிஐ


பிரிஸ்பேனில் இந்திய அணி பெற்ற வெற்றியை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.பிரமித்துபோய் நிற்கிறேன். 20 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறுவது எளிதானது அல்ல என இந்திய அணியின் கேப்டன் ரஹானே புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை 2-வது முறையாக வென்றது.

இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றிக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். கடந்த 69 ஆண்டுகளுக்குப்பின் பிரிஸ்பேன் மைதானத்தில் மிக்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்து இந்திய அணி வென்றுள்ளது.

அதிலும் காபா மைதானத்தில் கடந்த 32 ஆண்டுகளாக ஆஸ்திேரலிய அணியை எந்த அணியும் வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றை மாற்றி இந்திய அணி இந்த வெற்றி மூலம் எழுதியுள்ளது.
அடிலெய்ட் ெடஸ்டில் 36 ரன்களில் சுருண்டு மோசான தோல்வி அடைந்தபின், அதிலிருந்து மீண்டு வந்து, அடுத்தடுத்து வந்த போட்டிகளில் வெற்றி, டிரா, மீண்டும் வெற்றி என இந்திய அணி சாதித்திருப்பது சாதாரணமானது அல்ல.

இந்த வெற்றி குறித்து கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில் கூறுகையில் “ இந்த வெற்றிக்கு ஏராளமான அர்த்தத்தை கொடுத்துள்ளது. எப்படி விவரிப்பது எனத் தெரியவி்லலை. அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்குப்பின், எங்களுடைய வீரர்கள் தங்களின் போராட்டக் குணத்தையும், உறுதியான மனோதிடத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரையும் நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

நானும் புஜாராவும் களத்தில் பேசுகையில், புஜாராவை வழக்கமான ஆட்டத்தை கையாளுங்கள், நான் அவ்வப்போது அதிரடி ஷாட்களை ஆடுகிறேன் என்று தெரிவித்தேன். ஆஸ்திரேலிய வீரர்கள் அளித்த அழுத்தத்தை சமாளித்து ஆடிய புஜாரவுக்கு பாராட்டுக்களை வழங்க வேண்டும். ரிஷப்பந்த், சுந்தர் இருவரும் கடைசியில் வெற்றிக்கான பாதையை காட்டினார்கள்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவது சாதரணமானது அல்ல. 5 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினோம். அனுபவமற்ற வீரர்கள், ஜடேஜாவுக்கு பதிலாக கொண்டுவரப்பட்ட சுந்தர் சிறப்பாகச் செயல்பட்டார். சிராஜ் 2 போட்டிகள் மட்டுமே விளையாடினார், ஷைனி என அனுபவற்ற வீரர்களாக இருந்தாலும், தங்களின் போராட்டக் குணத்தை வெளிப்படுத்திய பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டுகள்” எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில் “ நாங்கள் தொடரை வெல்வோம் என பிரிஸ்பேனில் நினைத்தோம். ஆனால், இந்திய அணி சிறப்பாக ஆடி எங்களை வீழ்த்திவிட்டார்கள். இந்த தொடர் வெற்றிக்கு உரித்தானவர்கள் இந்திய அணிதான். நாங்கள் நிறைய விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. சிறந்த அணியிடம்தான் நாங்கள் தோற்றுள்ளோம்.
இந்தியாவை வீழ்த்த திட்டம் வகுத்தோம். ஆனால், அவர்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்கள்.” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

மேலும்