விளையாட்டாய் சில கதைகள்: புத்துணர்ச்சி கொடுத்த சிக்ஸர்கள்

By பி.எம்.சுதிர்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சாதனைகளில் ஒன்று, ஒரே ஓவரில் யுவராஜ் சிங் அடித்த 6 சிக்ஸர்கள். 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில்தான் இந்த அசுர சாதனையை நிகழ்த்தினார் யுவராஜ் சிங்.

2007-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையில் தோற்றதால், டி20 உலகக் கோப்பைக்கு முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட புதிய அணியை தேர்ந்தெடுத்தது இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு. அணியில் மூத்தவராக இருந்த யுவராஜ் சிங்கை கேப்டனாக்காமல், தோனியை கேப்டனாக்கியது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்த தொடரில் அணிக்காக உயிரைக் கொடுத்து ஆடினார் யுவராஜ் சிங். இந்த சூழலில்தான் செப்டம்பர் 19-ம் தேதி இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது.

இப்போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியின் 18-வது ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்திருந்தது. இந்த நேரத்தில்தான் விஸ்வரூபம் எடுத்தார் யுவராஜ் சிங். ஸ்டூவர்ட் பிராட் வீசிய 19-வது ஓவரில் அடுத்தடுத்து 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் முறையாக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையை யுவராஜ் சிங் படைத்தார். அத்துடன் 12 பந்துகளில் அரைசதம் அடித்தும் சாதனை படைத்தார். சர்வதேச அளவில் இன்றுவரை இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.

இப்போட்டியில் யுவராஜ் அடித்த சிக்ஸர்கள், இந்திய வீரர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த உத்வேகத்தால் அடுத்தடுத்த போட்டிகளில் வென்ற இந்திய அணி, 2007-ம் ஆண்டில் நடந்த முதலாவது டி20 உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

இந்தியா

49 mins ago

க்ரைம்

53 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்