ரஞ்சிகோப்பை போட்டியில் தமிழகம் த்ரில் வெற்றி

By செய்திப்பிரிவு

ரஞ்சிக்கோப்பை போட்டியில் தமிழகம்-பரோடா அணிகள் இடை யேயான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடை பெற்றது. இதன் முதல் இன்னிங் ஸில் தமிழக அணி 125 ரன்க ளுக்கும், பரோடா அணி 159 ரன்க ளுக்கும் ஆல் அவுட் ஆனது.

34 ரன்கள் பின்தங்கிய நிலை யில் 2-வது இன்னிங்ஸை ஆடிய தமிழக அணி மீண்டும் பேட்டிங்கில் சொபிக்க தவறியது. கேப்டன் அபினவ் முகுந்த் இம்முறையும் டக் அவுட்டானார். பரத் சங்கர் 15, பாபா அபராஜித் 39, தினேஷ் கார்த்திக் 18, இந்திரஜித் 35 ரன்கள் சேர்க்க முடிவில் 59.4 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 122 ரன்கள் எடுத் தால் வெற்றி என்ற எளிதான இலக் குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய பரோடா 2-வது நாள் ஆட்டேநர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்தது. நேற்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ராகில் ஷா, ரங்கராஜன், சந்திரசேகர் ஆகியோரது நேர்த்தியான ‘பந்து வீச்சில் பரோடா அணி ஆட்டம் கண்டது. தேவ்தார் 23, சோலங்கி 7, வாஹ்மோட் 6, பாண்ட்யா 17, யூசுப் பதான் 5, ஹீடோ 32, ஷா 8, பார்கவ் பாட் 0, வோரா 2, மங்காலோர்கர் 0 ரன்களில் நடையை கட்ட முடிவில் 35.4 ஓவர்களில் பரோடா அணி 114 ரன்களுக்கு அனைத்து விக் கெட்டுகளையும் இழந்தது.

இதனால் தமிழக அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. தமிழகம் தரப் பில் ராகில் ஷா 5, ரங்கராஜன் 3, சந்திரசேகர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ராகில் ஷாவுக்கு வழங்கப்பட்டது.

ராஜ்காட்டில் நடைபெற்ற போட்டியில் சவுராஸ்டிரா அணி இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுரா அணியை தோற்கடித்தது. சவுராஸ்டிரா தரப் பில் ரவீந்திர ஜடேஜா இரு இன் னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட் டுகள் சாய்த்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

53 mins ago

சுற்றுச்சூழல்

13 secs ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்