நியூசிலாந்து அணியுடன் இந்தியா இன்று பலப்பரீட்சை

By செய்திப்பிரிவு

ரியோ நகரில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நியூசி லாந்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளது. நியூசிலாந்து ஏ அணியுடன் மோதிய 2 ஆட் டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கிலும், 2வது ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கிலும் இந்திய அணி வெற்றியை வசப் படுத்தியிருந்தது. உத்தப்பா, ராமன்தீப் ஆகாஸ்தீப், நிக்கின் திம்மையா, சுனில் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

இந்நிலையில் நியூசிலாந்து தேசிய அணிக்கு எதிராக இந்திய அணி 4 ஆட்டங்களில் விளையாட உள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று நெல்சன் நகரில் நடை பெறுகிறது. கடைசியாக இரு அணிகளும் கடந்த ஆண்டு உலக ஹாக்கி லீக் பைனல் மோதின. இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. 2 பயிற்சி ஆட்டங்களில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் இன் றைய போட்டியை இந்திய அணி எதிர்கொள்கிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் நியூசிலாந்து போட்டியை சந்திக் கிறது.

போட்டி தொடர்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சி யாளர் ரோலண்ட் ஓல்டுமான்ஸ் கூறுகையில், கடந்த இரு ஆட்டங் களில் இருந்தும் இந்திய அணி வீரர்கள் நன்கு கற்றுக்கொண் டுள்ளனர். களத்தில் எதிரணி வீரர் களின் தடுப்பு அரண்களை தாண்டி எப்படி கோல் அடிக்க வேண்டும் என்பதில் முன்னேற்றம் கண்டுள் ளோம். சிறப்பான ஆட்டம் தொட ரும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் கிடைக்கும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்க ளாக மாற்றுவதும் குறிக்கோளாக அமையும்" என்றார். -பி.டி.ஐ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

உலகம்

2 mins ago

வணிகம்

18 mins ago

வாழ்வியல்

14 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

ஆன்மிகம்

32 mins ago

விளையாட்டு

37 mins ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்