இங்கிலாந்து-தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடர் ரத்து: இரு நாட்டு வீரர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் முடிவு

By பிடிஐ

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெறுவதாக இருந்த ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டறிக்கை மூலம் இன்று அறிவித்துள்ளன.

இரு நாடுகளின் வீரர்கள் சிலர் கரோனாவில் பாதிக்கப்பட்டதும், வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டதை அடுத்து, இந்த அறிவிப்பை இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் வெளியிட்டுள்ளன.

இரு நாட்டு வீரர்களின் மனநலம் மற்றும் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை இரு வாரியங்களும் எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செய்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடத்தத் திட்டமிடப்பட்டது.

ஆனால், தென் ஆப்பிரிக்க வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஊழியர்களுக்குக் கரோனா ஏற்பட்டது. மேலும், தென் ஆப்பிரிக்க அணியில் உள்ள 3 வீரர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியில் உள்ள ஊழியர்கள் இருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதனால் வெள்ளிக்கிழமை நடக்க இருந்த முதல் ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது

ஆனால், தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவருக்குப் புதிதாகக் கரோனா தொற்று ஏற்பட்டது, இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்கள் இருவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், முதல் ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் மீண்டும் முழுமையாகக் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

இதையடுத்து, வேறு வழியின்றி ஒருநாள் தொடரை ரத்து செய்வதாக இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்கள் பேசி முடிவு எடுத்தன.

இதுகுறித்து இரு வாரியங்களும் வெளியிட்ட அறிவிப்பில், “இரு நாட்டு வீரர்களின் உடல்நலம், மனநலம் மிகவும் அவசியம். சமீபத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தீவிரமாக ஆலோசித்தோம். இதையடுத்து வீரர்களின் நலன் கருதி ஒருநாள் தொடரை ரத்து செய்வதாக முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

27 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்