100-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரர் ரகுநாத் சந்தோர்கர் 

By பிடிஐ

இந்தியாவின் முதல்தர கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்த ரகுநாத் சந்தோர்கர் தனது 100-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் ரகுநாத் சந்தோர்கர் தனது பிறந்தநாளில் ஒரு நூற்றாண்டு நிறைவடைந்த மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர்களில் பேராசிரியர் டி.பி. தியோதர் (1892-1993) மற்றும் வசந்த் ரைஜி (1920-2020) ஆகியோர் மட்டுமே 100 பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள்.

மகாராஷ்டிரா (1943-44 முதல் 1946-47 வரை) மற்றும் பம்பாய் (1950-51) அணிகளுக்காக முதல் 7 ஆட்டங்களில் சந்தோர்கர் விளையாடினார். சுழற்பந்து வீச்சாளரும் பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்த சந்தோர்கர் ஏழு ஆட்டங்களில் 155 ரன்கள் எடுத்திருந்தார்.

அவர் சுழற்பந்து வீச்சில் மட்டுமின்றி ஸ்டம்பிற்குப் பின்னால் வரும் கடினமான கேட்ச்களை எடுப்பதில் வல்லவர் என்று நினைவுகூரப்படுகிறார். ரகுநாத் சந்தோர்கர் தற்போது மும்பையின் புறநகர்ப் பகுதி ஒன்றில் வசித்து வருகிறார்.

பிம்பிரி சின்ச்வாட் மாநகராட்சியின் ஆணையராகப் பணியாற்றும் சந்தோர்கரின் பேரன் ஷ்ரவன் ஹார்டிகர் கூறுகையில் “கிரிக்கெட் இன்னும் அவரது விருப்பமாக உள்ளது. அவர் சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளமுடியவில்லை, என்றாலும் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்கிறார்.. ”என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

47 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்