ஹாக்கியில் மீண்டும் இந்தியா அசத்தல்

By பிடிஐ

ரியோ நகரில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நியூசி லாந்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளது. நியூசிலாந்து ஏ அணியுடன் 2 ஆட்டங்களிலும் நியூசிலாந்து தேசிய அணியுடன் 4 ஆட்டங்களிலும் இந்திய அணி விளையாடுகிறது.

ஆக்லாந்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று மீண்டும் நியூசிலாந்து ஏ அணியுடன் இந்தியா மோதியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் சுனில், நிக்கின் திம்மையா ஆகி யோர் கொடுத்த பாஸை பெற்று உத்தப்பா அருமையாக கோல் அடித்தார்.

பின்னர் 34வது நிமிடத்திலும் உத்தப்பா தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. நியூசிலாந்து வீரர்களால் போராடியும் உடனடி யாக பதில் கோல் அடிக்க முடிய வில்லை. 57வது நிமிடத்தில் அந்த அணியின் ஸ்டீபன்ஜென்நெஸ் முதல் கோலை அடித்தார். முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வரும் 6ம் தேதி நெல்சன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து தேசிய அணியை, இந்திய அணி எதிர்கொள்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்