2021-ல் 5 டெஸ்ட் போட்டியில் விளையாட இங்கிலாந்து செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் ஆட்டங்களுக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூன் மாதம் இலங்கை அணி 3 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. பிறகு ஜூலையில் பாகிஸ்தான் அணி தலா 3 ஒரு நாள், டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதன்பின்னர் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இந்திய அணி இங்கிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

நாட்டிங்காம் நகரில் ஆகஸ்ட் 4-ல் தொடங்கும் டெஸ்ட் தொடர், செப்டம்பர் 14-ல் மான்செஸ்டர் நகரில் நிறைவடைகிறது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4 முதல் 8 வரை நாட்டிங்காம் நகரிலும், 2-வது டெஸ்ட் ஆகஸ்ட் 12 முதல் 16 வரை லார்ட்ஸிலும், 3-வது டெஸ்ட் ஆகஸ்ட் 25 முதல் 29 வரை லீட்ஸிலும், 4-வது டெஸ்ட் செப்டம்பர் 2 முதல் 6 வரை தி ஓவலிலும் 5-வது டெஸ்ட் செப்டம்பர் 10 முதல் 14 வரை மான்செஸ்டரிலும் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

6 mins ago

தமிழகம்

37 mins ago

சுற்றுலா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்