மறக்கமுடியாத காட்டடி: ஐபிஎல் தொடரில் விளாசப்பட்ட 5 பந்து வீச்சாளர்களின் மோசமான ஓவர்கள் 

By செய்திப்பிரிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 13-வது சீசன் ஐபிஎல் போட்டியில் பெரும்பாலான ஆட்டங்கள் அனைத்தும் சுவாரஸ்யம் மிகுந்தவையாகவே இருந்தன. சில போட்டிகள் தொடக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, காற்றுபோன டயர் போல் கடைசியில் போன ஆட்டங்களும் இருந்தன.

சில போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாகவும், சில போட்டிகள் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாகவும் இருந்தன. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் கடைசி 5 ஓவர்கள் ரசிகர்களை இருக்கையின் நுனிவரை அமரவைத்தன.

ஏனென்றால், அந்தக் கடைசி 5 ஓவர்களில்தான் பந்துவீச்சாளர்கள் முழுத் திறமையையும் பயன்படுத்தி டெத் ஓவர்களை வீச முயன்றனர். அந்த டெத் ஓவர்களைத் தங்கள் காட்டடி ஷாட்களால் சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் தெறிக்கவிட்ட பேட்ஸ்மேன்களும் இருந்தனர்.

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் 5 பந்து வீச்சாளர்கள் வீசிய ஓவர்களை ஒருபோதும் அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு பேட்ஸமேன்கள் வெளுத்து வாங்கினர்.

அதுகுறித்த விவரம்:

1. ஷெல்டல் காட்ரெலைக் காலி செய்த திவேட்டியா

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடந்த லீக் ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வெற்றி பெறுவது சந்தேகம் என்று நினைத்திருந்த ஆட்டத்தை அந்த அணியின் ராகுல் திவேட்டியா 6 சிக்ஸர்கள் விளாசி ஒரே நாளில் நாடு முழுவதும் பேசக்கூடிய பேட்ஸ்மேனாக மாறினார்.

ஷார்ஜாவில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 224 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தது பஞ்சாப் அணி. ஆனால் 17-வது ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள்தான் சேர்த்திருந்தது. அதன்பின் ஷெல்டன் காட்ரெல் வீசிய ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் சேர்ததார் திவேட்டியா. இதுதான் ஐபிஎல் தொடரிலேயே மோசமாக வீசப்பட்ட ஓவராகும். அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றது.

2. இங்கிடி ஓவரைப் பிரித்தெடுத்த ஆர்ச்சர்

சிஎஸ்கே அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதிய லீக் ஆட்டம்தான் சிஎஸ்கேவின் வெற்றியைப் பறித்தது. ஏனென்றால், லுங்கி இங்கிடி வீசிய கடைசி ஓவரில் ராஜஸ்தான் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் அடித்த ஸ்கோர்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அந்த ஸ்கோர்தான் சிஎஸ்கே அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.

இங்கிடி கடைசி ஓவரில் 2 நோ பால்கள், ஒரு வைடு என 9 பந்துகள் வீசினார். இதைச் சரியாகப் பயன்படுத்திய ஆர்ச்சர் முதல் பந்தில் சிக்ஸர், 2-வது பதில் ஒரு சிக்ஸர், 3-வது பந்து நோபாலாக வீசப்பட்டதால், ப்ரீஹிட்டில் ஒரு சிக்ஸர் விளாசினார். 4-வது பந்தில் மீண்டும் சிக்ஸர் என மொத்தம் 30 ரன்கள் விளாசப்பட்டது.

3.பூரனின் அதிரடி ஆட்டம்

சன்ரைசர்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் நிகோலஸ் பூரனின் அதிரடி ஆட்டமும் பேசப்பட்டது. சாதனையாகவும் அமைந்தது. சன்ரைசர்ஸ் சுழற்பந்துவீச்சாளர் அப்துல் சமது வீசிய ஒரு ஓவரில் 6,4,6,6,6 என 28 ரன்கள் சேர்த்தார் பூரன்.

இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடிய பூரன், 17 பந்துகளில் அதிவிரைவாக அரை சதம் அடித்து 30 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் 2-வது மிக மோசமான ஓவராக இது அமைந்தது.

4. ஜம்ப்பா ஓவரை நொறுக்கிய பொலார்ட்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பொலார்ட் வெளுத்து வாங்கிய இந்த ஆட்டத்தையும் குறிப்பிட வேண்டும். ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜம்ப்பா வீசிய ஓவரில் பொலார்ட் பொளந்து கட்டினார்.

ஜம்ப்பாவின் ஒரு ஓவரில் மட்டும் பவுண்டரி, சிக்ஸர், சிக்ஸர், 2 ரன்கள், சிக்ஸர், 3 ரன்கள் என 27 ரன்கள் சேர்க்கப்பட்டன. இது ஐபிஎல் தொடரில் 3-வது மோசமான ஓவராக அமைந்தது.

5. ஹர்திக் பாண்டியாவின் ருத்ர தாண்டவம்

ஹிட்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் பற்றிப் பேசினால் ஹர்திக் பாண்டியா பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. இந்தத் தொடரில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடப் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த வாய்ப்புகளில் தனது அதிரடியை வெளிக்காட்ட மறக்கவில்லை.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா ஆடிய ருத்ர தாண்டவத்தை மறக்க முடியாது. ராஜஸ்தான் வீரர் அங்கித் ராஜ்புத் வீசிய ஒரு ஓவரில் 26 ரன்களை விளாசினார் ஹர்திக் பாண்டியா. 21 பந்துகளில் 60 ரன்களை இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா எடுத்தார். அதுமட்டுமல்லாமல் மைதானத்தில் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக ஒற்றைக் காலை மடக்கி தனது கைகளை உயர்த்தி ஆதரவும் அளித்தார். ஆனால், இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணிதான் வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

விளையாட்டு

35 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்