விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த ரோகித் சர்மா

By பி.எம்.சுதிர்

கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை சாதனை என்று வந்துவிட்டால் இந்தியர்களை அடித்துக்கொள்ள ஆளில்லை. டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்தது, சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தது, அதிக சதங்களை அடித்தது என்று இந்தியர்களின் பெயரைச் சொல்ல பல சாதனைகள் உள்ளன. அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்த நாள் நவம்பர் 13.

பொதுவாகவே ஒருநாள் கிரிக்கெட் போட்டி களில் ஒரு வீரர் இரட்டைச் சதத்தை அடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. 1970-களில் இருந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமானாலும், இப்போட்டியில் முதல் இரட்டைச் சதம், 2010-ம் ஆண்டில்தான் அடிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 2010-ல் நடந்த ஒருநாள் போட்டியில் முதல் முறையாக சச்சின் டெண்டுல்கர் 200 ரன்களை அடித்தார். இதைத்தொடர்ந்து 2011-ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக வீரேந்தர் சேவாக்கும், அவரைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மாவும் இரட்டைச் சதத்தைக் கடந்தனர்.

இந்த சூழலில்தான் 2014-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி இலங்கை அணியை எதிர்கொண்டது இந்தியா. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார் ரோகித் சர்மா. 4 ரன்களை எடுத்திருந்த நேரத்தில், அவர் கொடுத்த கேட்சை திசரா பெரைரா தவறவிட்டார். இது ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியது. முதல் 100 பந்துகளில் 100 ரன்களை எடுத்த ரோகித் சர்மா, அதன் பிறகு விஸ்வரூபம் எடுத்தார். அடுத்த 73 பந்துகளில் 164 ரன்களை விளாசித் தள்ளினார். மொத்தத்தில் அன்றைய போட்டியில் அவர் 173 பந்துகளில் 264 ரன்களை எடுத்தார். இதில் 33 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடங்கும்.

ரோகித் சர்மாவின் வெறியாட்டத்தால் அன்றைய தினம் இந்திய அணி 50 ஓவர்களில் 404 ரன்களைக் குவித்தது. பதிலுக்கு இலங்கை அணி 251 ரன்களில் ஆட்டமிழந்தது. இப்போட்டியில் ரோகித் சர்மா தனியாக அடித்த ஸ்கோரைவிட இலங்கை அணி 13 ரன்கள் குறைவாகப் பெற்றது. அன்றைய போட்டியில் ரோகித் சர்மா அடித்த 264 ரன்களை இதுவரை எந்த வீரரும் முறியடிக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்