உஹான் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்

By பிடிஐ

சீனாவில் பெண்களுக்கான உஹான் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, ரோமேனியாவின் இரினா-மோனிகா ஜோடியை எதிர்த்து ஆடியது. இதில் சானியா ஜோடி 6-2, 6-3 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

சானியா-ஹிங்கிஸ் ஜோடி இந்த ஆண்டில் பெறும் 7வது பட்டம் இதுவாகும்.

இந்த ஜோடி இந்த ஆண்டில் இந்தியன் வெல்ஸ், மியாமி, சார் லெஸ்டன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன், குவாங்சூ ஓபன் போட்டிகளிலும் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசியாக ஆடிய 3 தொடர்களில் 13 ஆட்டங்களில் ஒரு செட்டை கூட இழக்காமல் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் வீனஸ் வில்லி யம்ஸ், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவை எதிர்த்து ஆடினார். இதில் வீனஸ் 6-3, 3-0 என்ற கணக் கில் முன்னிலை வகித்த போது முகுருஸா காயம் காரணமாக வெளியேறினார். இதனால் வீனஸ் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்