டி20-யின் டான் பிராட்மேன்: கிறிஸ் கெய்லைக் கொண்டாடும் சேவாக்

By செய்திப்பிரிவு

கிறிஸ் கெய்ல் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 99 ரன்களில் ஆட்டமிழந்தார், இதில் 8 சிக்சர்களை விளாசினர். கடைசி 2 சிக்சர்கள் 1000 மற்றும் 1001வது சிக்சர்களாகும்.

டி 20 கிரிக்கெட்டில் முதன் முதலாக 1000 சிக்சர்களை அடித்து வரலாறு படைத்தார் யுனிவர்ஸ் பாஸ். இந்த ஐபிஎல் தொடரிலும் 6 ஆட்டங்களில் 23 சிக்சர்களை விளாசியுள்ளார்.

18வது ஓவரில் கார்த்தி தியாகி பந்தை தூக்கி சிக்சர் அடித்தது 1000வது சிக்ஸ் ஆகும். டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களை விளாசியுள்ளார் கெய்ல்.

இந்நிலையில் ட்விட்டரில் கெய்லை பலரும் புகழ்ந்துள்ளனர்:

சேவாக்: “டி20யின் பிராட்மேன் கிறிஸ் கெய்ல்ஸ், சந்தேகமேயில்லை கிரேட்டஸ்ட், ஒருவர் மட்டுமே, இவர் மட்டுமே. கேளிக்கையின் தந்தை”

மைக்கேல் வான்: இப்போதுதான் 41 வயதான கெய்ல் 99 ரன்களை எடுத்ததைப் பார்த்தேன். இதில் டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்சர்கள். கேள்வியின்றி அனைத்து கால சிறந்த டி20 ப்ளெயர் என்றால் அது கெய்ல்தான்.

டாம் மூடி: நினைவில் கொள்ளுங்கள், கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்சர்களை அடித்துள்ளார்.

ஐசிசி தன் ட்விட்டர் பக்கத்தில், “கிறிஸ்டபர் ஹென்றி கெய்லுக்கு 1000 சிக்சர்கள், இதுதான் பதிவு .. ஆம் இவ்வளவுதான்” என்று பதிவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்