7 இன்னிங்ஸ், 45 பந்துகள், 32 ரன்கள், 6 முறை அவுட்: ஜோப்ரா ஆர்ச்சரின் ‘செல்லப்பிள்ளை’ ஆன டேவிட் வார்னர்

By செய்திப்பிரிவு

இங்கிலாந்தின் இளம் வேகப்புயல் தனது வேகம், ஸ்விங், பவுன்ஸ் மூலம் எல்லா வீரர்களையும் இந்த ஐபிஎல் தொடரில் ஆட்டிப்படைத்து வருகிறார். குறிப்பாக சன் ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், ஐபிஎல் தொடர் என்றில்லை, அனைத்து வடிவங்களிலும் ஜோப்ரா ஆர்ச்சரிடம் காலியாகி கொண்டிருக்கிறார்.

ஒரு பவுலரிடம் தொடர்ந்து அவுட் ஆனால் கிரிக்கெட்டில் அவர்களை bunny என்று கேலியாக அழைக்கப்படுவதுண்டு, அப்பேர்ப்பட்ட செல்லப்பிள்ளையாகி விட்டார் ஆர்ச்சருக்கு வார்னர்.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர், தன் சக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவையும், டேவிட் வார்னரையும் வீழ்த்தினார், இதில் ஸ்டீவ் ஸ்மித்தின் ஸ்மார்ட் கேப்டன்சியும் அடங்கியுள்ளது. 2வது ஸ்லிப்பை நிறுத்தியதோடு அங்கு பென் ஸ்டோக்சை நிறுத்தியதும் மாஸ்டர் ஸ்ட்ரோக்.

இந்நிலையில் முதல் போட்டியிலும் ஜோப்ரா ஆர்ச்சரிடம் ஆட்டமிழந்த வார்னர், நேற்றும் ஆர்ச்சர் பவுலிங்கில் கேட்ச் ஆகி வெளியேறினார். மணீஷ் பாண்டே இறங்கிய போதும் ஆர்ச்சருக்கு இன்னொரு ஓவர் கொடுத்திருந்தால் ஹைதராபாத் நேற்று காலியாக அதிக வாய்ப்புகள் இருந்தன, அங்குதான் ஸ்மித் கோட்டை விட்டார். ஸ்மித் முக்கியத் தருணங்களில் கேப்டன்சியில் கோட்டை விடுகிறார்.

150 கிமீ வேகத்தில் வீசினால் என்ன செய்ய முடியும்? கடினம்தான் என்று வார்னரே ஒப்புக் கொண்டார்.

இரண்டு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமல்ல இதுவரை வார்னர் பேட் செய்ய வந்த போதெல்லாம் ஆர்ச்சர் வீசினால் அவரிடமே ஆட்டமிழந்துள்ளார் வார்னர். இந்த ஆண்டில் அனைத்து வடிவங்களிலும் 7 இன்னிங்ஸ்களில் ஆர்ச்சரின் 45 பந்துகளை எதிர்கொண்ட வார்னர் 32 ரன்களை மட்டுமே எடுத்ததோடு 6 முறை ஆர்ச்சரிடம் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டேவிட் வார்னர் கூறுகையில், “நான் வெறுப்படைந்து விட்டேன். இந்த ஆட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை எதிர்கொள்வது அவ்வளவு சுலபமாக இல்லை. பந்து ஸ்விங் ஆகிறது, தையலில் பட்டு எகிறுகிறது. அதுவும் 150 கிமீ வேகத்தில் இப்படி வீசினால் ஒன்றும் செய்ய முடியாது.

அடித்து ஆடி பார்க்கலாம், ஆனால் அதில் ஆட்டமிழக்கிறோம். நான் அப்படித்தான் ஆட்டமிழந்தேன்.” என்றார் வார்னர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்