வங்கதேச தொடர்: டேவிட் வார்னர் விலகல்

By பிடிஐ

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான டேவிட் வார்னர் கை விரலில் ஏற் பட்ட காயம் காரணமாக வங்கதேசத் துக்கு எதிரான டெஸ்ட் தொடரி லிருந்து விலகியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது ஸ்டீவன் ஃபின் வீசிய பவுன்சரில் வார்னரின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதை யடுத்து ரிட்டையர்ட் ஹர்ட் முறை யில் வெளியேறிய அவர், எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகினார்.

டேவிட் வார்னரின் காயம் குறித்து சிட்னியில் உள்ள கை காயத் துக்கான சிறப்பு நிபுணரிடம் சோதிக் கப்பட்டது. அப்போது அவருடைய காயத்துக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்றாலும், வங்கதேச தொடருக்கு முன்னதாக அவர் பூரண குணமடையமாட்டார் என தெரியவந்தது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. எனினும் நவம்பரில் தொடங்கவுள்ள நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட அவர் தயாராகிவிடுவார் என குறிப்பிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் பொது மேலாளர் பட் ஹோவர்ட் கூறுகையில், “வார்னரின் காயம் குணமடைய குறைந்தபட்சம் 4 வாரங்கள் ஆகும். எனினும் அவர் பயிற்சியில் களமிறங்க மேலும் 2 வாரங்கள் தேவைப்படும். ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக களமிறங்கவுள்ள முதல் தொடரிலிருந்து விலக நேரிட்டிருப்பதால் அது அவருக்கு நிச்சயம் ஏமாற்றமாகவே அமையும்” என்றார்.

வங்கதேச தொடரிலிருந்து விலகியது குறித்துப் பேசிய வார்னர், “மிகவும் ஏமாற்றமளிக்கிறது. ஆஸ்திரேலியாவுக்காக ஆடும் எந்தப் போட்டியையும் ஒருபோதும் இழக்க விரும்பியதில்லை. எனினும் காயத்திலிருந்து விரைவாக மீள் வதற்கான எல்லா முயற்சிகளையும் எடுப்பேன்” என்றார்.

ஆஸ்திரேலிய அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி அக்டோபர் 9-ம் தேதி சிட்டகாங்கில் நடைபெறுகிறது. 2006-க்குப் பிறகு இவ்விரு அணிகள் இடையே நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 mins ago

ஜோதிடம்

28 mins ago

க்ரைம்

18 mins ago

இந்தியா

32 mins ago

சுற்றுலா

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்