அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வெல்வது யார்? - ஜோகோவிச்-ஃபெடரர் இன்று பலப்பரீட்சை

By ஏஎஃப்பி

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெறவுள்ள ஆடவர் ஒற்றை யர் இறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 2-ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும் மோதுகின்றனர்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஜோகோவிச் தனது அரையிறுதி யில் 6-0, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் நடப்பு சாம்பியனான குரேஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார். இந்த ஆட்டம் நவீன கால டென்னிஸ் வரலாற்றில் மிகமோசமான ஒரு தரப்பு ஆட்டமாக அமைந்துள்ளது.

மரின் சிலிச்சுடன் 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜோகோவிச், அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். ரோஜர் ஃபெடரர் தனது அரையிறுதியில் 6-4, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை தோற்கடித்தார்.

அமெரிக்க ஓபனில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ரோஜர் ஃபெடரர், இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும்பட்சத் தில் 1970-க்குப் பிறகு அமெரிக்க ஓபனில் வாகை சூடிய மூத்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார். 2004 முதல் 2008 வரை அமெரிக்க ஓபனில் அசைக்க முடியாத சக்தி யாக திகழ்ந்த ஃபெடரர், அமெரிக்க ஓபனில் 7-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் அவர் விளை யாடவுள்ள 27-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்று இது.

கடந்த ஜூலையில் நடந்த விம்பிள்டன் இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வி கண்ட ஃபெடரர், அதன்பிறகு நடை பெற்ற சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆனார். கடைசியாக 2012 விம்பிள்டனில் வாகை சூடிய ஃபெடரர் அதன் பிறகு எந்த கிராண்ட்ஸ்லாம் போட்டி யிலும் பட்டம் வெல்லவில்லை.

கடந்த ஜூலையில் நடந்த விம்பிள்டன் இறுதிச்சுற்றில் தோற்ற பிறகு விளையாடிய எந்தப் போட்டி யிலும் ஒரு செட்டைகூட ஃபெடரர் இழக்கவில்லை. அதனால் அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந் துள்ளது. ஃபெடரர் 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா என்பது இன்று நள்ளிரவு தெரிந்துவிடும்.

2011 அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவரான ஜோகோவிச், அமெரிக்க ஓபனில் 6-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். ஒட்டுமொத் தத்தில் அவர் விளையாடவுள்ள 18-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்று இது. இதன்மூலம் பீட் சாம்ப்ராஸின் சாதனையை சமன் செய்துள்ள ஜோகோவிச், 10-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வதில் தீவிரமாக இருக்கிறார்.

ஜோகோவிச்சும், ஃபெடரரும் இதுவரை 41 போட்டிகளில் மோதி யுள்ளனர். அதில் ஃபெடரர் 21 வெற்றிகளையும், ஜோகோவிச் 20 வெற்றிகளையும் பதிவு செய்துள்ள னர். அமெரிக்க ஓபனில் 5 முறை மோதியுள்ளனர். அதில் ஃபெடரர் 3-ல் வென்றிருந்தாலும், கடைசி யாக நடந்த இரு போட்டிகளில் ஜோகோவிச்தான் வெற்றி பெற்றுள் ளார். அந்த இரு போட்டிகளிலுமே 5 செட்கள் ஆடப்பட்டன. இந்த ஆண்டில் இவர்கள் இருவரும் 6-வது முறையாக மோதுகின்றனர். அந்த 6 போட்டிகளும் இறுதிச்சுற்று என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிச்சுற்று குறித்துப் பேசிய ஜோகோவிச், “ரோஜர் ஃபெடரர் எந்தளவுக்கு தொடர்ச்சியாக சிறப் பாக ஆடி வருகிறார். அதிலும் கடைசிக் கட்ட போட்டிகளில் எப்படி ஆடியிருக்கிறார் என்பது அனை வருக்கும் தெரியும். அவர் எப் போதும் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். எதிராளிகளை யும் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்த வைப்பார். அவருடைய ஆட்டத்தில் வேகம் அதிகரித்துள் ளது. எனவே இந்த ஆட்டம் கடும் சவாலானதாக இருக்கும்” என்றார்.

இந்தப் போட்டி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக மகளிர் இரட்டையர் இறுதிச்சுற்று நடைபெறுகிறது. அதில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட் டினா ஹிங்கிஸ் ஜோடி, ஆஸ்தி ரேலியாவின் டெல்லக்காவ்-கஜகஸ்தானின் யாரோஸ்லாவா ஜோடியை சந்திக்கிறது.

வரலாறு படைக்கும் வாய்ப்பை இழந்தார் செரீனா!

நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றை யர் அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீராங் கனையும், நடப்பு சாம்பியனுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-2, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ராபர்ட்டா வின்ஸியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

கடந்த அமெரிக்க ஓபனில் ஆரம்பித்து தொடர்ச்சியாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்று வந்தார் செரீனா. இந்த அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில் 1988-க்குப் பிறகு காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வென்றவர் என்ற பெருமையை செரீனா பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக செரீனா தோற்றது உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

1988-ல் ஜெர்மனியின் ஸ்டெபி கிராஃப் காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வென்றார். அதன்பிறகு யாரும் வெல்லவில்லை. ஒருவேளை இந்த முறை செரீனா வென்றிருந்தால் அந்த சாதனையைப் படைத்திருப்பார். இதுதவிர ஓபன் எராவில் அதிக கிராண்ட்ஸ்லாம் (22) வென்றவர் என்ற ஸ்டெபி கிராஃபின் சாதனையையும் சமன் செய்திருப்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

மேலும்