சகோதரருக்கு கரோனா: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்

By பிடிஐ

சகோதரருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ அமைப்பின் தலைவருமான சவுரவ் கங்குலி தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.

மேற்கு வங்கத்தின் முதல்நிலை வீரரும், பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளருமான ஸ்னேஹாசிஸ் கங்குலிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள பெல் வியூ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது சகோதரர் ஸ்னேஹாசிஸுக்குக் கரோனா உறுதியானதையடுத்து, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் தனிமைப்படுத்திக்கொண்டார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கங்குலி தனது பிசிசிஐ அலுவலகப் பணிகள் அனைத்தையும், தனது வீட்டுக்கு அருகே இருக்கும் அலுவலகத்தில் இருந்து கவனித்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கங்குலியிடம் இதுகுறித்துப் பேச நிருபர் முயன்றபோது, அவருக்கு இணைப்பு கிடைக்கவில்லை.

இதுகுறித்து கொல்கத்தா பெல்லே மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், “பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஸ்னேஹாசிஸ் கங்குலிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால் அவருக்குக் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கையாக அவரின் சகோதரர் சவுரவ் கங்குலியிடம் தெரிவித்து அவரையும் தனிமைப்படுத்திக்கொள்ளக் கூறியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.

சவுரவ் கங்குலியின் சகோதரருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்து பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அபிஷேக் டால்மியாவும் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்