தோனி ஆதரவு இல்லையெனில் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை 2014-ல் முடிந்திருக்கும்- கம்பீர்  பேட்டி

By செய்திப்பிரிவு

2014 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கோலி கடுமையாக சொதப்பிய போது அணியை விட்டு நீக்கப்பட்டிருப்பார், ஆனால் தோனி அவரை ஆதரித்தார், தோனி இல்லையெனில் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை அந்த இங்கிலாந்து தொடருடன் முடிந்திருக்கும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

10 இன்னிங்சில் 134 ரன்களையே கோலி அந்தத் தொடரில் எடுத்ததோடு, இங்கிலாந்து ஸ்விங் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லப்பிள்ளையாகி அவரிடமே ஆட்டமிழந்ந்து வந்தார். ஆனால் அதற்கு அடுத்த தொடரில் ஒரு முறை கூட கோலி ஆண்டர்சனிடம் விக்கெட்டைக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஓரிருமுறை ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் பிளம்ப் ஆகி நடுவர் அவுட் கொடுக்கவில்லை என்பது வேறொரு விஷயம்.

இதுதொடர்பாக விவிஎஸ் லஷ்மன், கவுதம் கம்பீர் ஆகியோர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தனர்.

லஷ்மண் கூறும்போது, ‘அந்தத் தொடரில் கோலி சரியாக ஆட முடியவில்லை, ஆனால் அடுத்த முறை இங்கிலாந்து சென்ற போது பர்மிங்ஹாமில் முதல் இன்னிங்ஸில் அடித்த சதம் மறக்க முடியாதது. கோலியின் இன்னிங்ஸ்களில் எனக்குப் பிடித்த இன்னிங்ஸ் ஆகு, அது. அந்த இன்னிங்ஸ்தான் கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டாராக கோலியை உருவாக்கியது’ என்றார்.

கம்பீர் கூறும்போது, “2014 தொடரில் நான் இருந்தேன். அந்தத் தொடரில் தோனிக்கு நாம் பாராட்டு தெரிவித்தே ஆக வேண்டும், ஏனெனில் நிறைய பேருடைய கிரிக்கெட் வாழக்கை முடிவுக்கு வந்திருக்கும். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில். தோனிதான் கோலியை மிகவும் ஆதரித்தார், இல்லையெனில் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை அந்தத் தொடரோடு முடிந்திருக்கும். ” என்றார்.

ஆனால் அதன் பிறகு வெகு வலுவாக எழுச்சியுற்ற கோலி, ஆஸ்திரேலியாவ்லி 8 இன்னிங்ஸ்களில் 692 ரன்களை விளாசினார் அதுவும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் 300 ரன்களுக்கும் மேலான இலக்கை விரட்டி சதம் அடித்து வெற்றி பெற முயற்சித்து மைக்கேல் கிளார்க்குக்கு அடிவயிற்றைக் கலக்கியதை மறக்க முடியுமா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

16 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்