துருக்கியில் இருந்து தாயகம் திரும்பி உள்ள ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்

By செய்திப்பிரிவு

துருக்கியில் இருந்து திரும்பி வந்துள்ள இந்திய எட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, பாட்டியலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு மையத்தில், 14 நாட்கள் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நீரஜ் சோப்ரா கடந்த சில மாதங்களாக துருக்கியில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து துருக்கியில் இருந்து கடந்த புதன்கிழமை தாயகம் திரும்பி உள்ளார் நீரஜ் சோப்ரா. அவருடன் மற்றொரு வீரரான ரோஹித் யாதவும் திரும்பி வந்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்குமாறு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (சாய்) உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சாய் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு மையத்தில் நீரஜ் சோப்ரா தங்கியிருக்க விரும்பினால் மற்ற வீரர்களுடன் தொடர்பு கொள்ளாமல் தன்னை தானே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரஜ் சோப்ராவுக்கும் அவருடன் திரும்பி வந்துள்ள ரோஹித் யாதவுக்கும் விளையாட்டு மையத்தில் தனி அறைகள் வழங்கப்படும்.

இந்த அறைகளுக்கு அருகே உள்ள பழைய உடற்பயிற்சி கூடத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேவேளையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்துள்ள சிவ்பால் சிங், விபின் கசனா ஆகியோர் பாட்டியாலா மையத்தில் தங்காமல் தங்களது வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

நீரஜ் உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்துள்ள வீரர்கள் அனைவருக்கும் கரோனா அறிகுறிகளுக்கான சோதனை விமான நிலையத்தில் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

15 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்