எனது கேப்டன் வாழ்க்கையில் ‘மங்கிகேட்’ மோசமான தருணமாக அமைந்தது: மனம் திறக்கும் ரிக்கி பாண்டிங்

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணி 2008-ம்ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது சிட்னியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸை குரங்கு என்று திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டு சமரசம் செய்தது. இந்த குற்றச்சாட்டில் இருந்து ஹர்பஜன் சிங் விடுவிக்கப்பட்டார். அதேவேளையில் இந்த நிகழ்வுக்குப் பின் சைமண்ட்ஸ் கிரிக்கெட்வாழ்க்கை கீழ்நோக்கி சென்றது.

இந்நிலையில் இந்த நிகழ்வுதனது கேப்டன்ஷிப் காலத்தின் மோசமான தருணமாக அமைந்ததாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ஸ்கைஸ்போர்ட்ஸ் சானல் நிகழ்ச்சியில் கூறியிருப்பதாவது:

ஹர்பஜன்-சைமண்ட்ஸ் இடையே நடந்த ‘மங்கிகேட்’ மோதல் விவகாரம் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமானதாக அமைந்தது. 2005-ம் ஆண்டுஆஷஸ் தொடரை நாங்கள் இழந்தது கடினமாகவே இருந்தது. ஆனால் அப்போது நான் முழு கட்டுப்பாட்டில் இருந்தேன். ஆனால் ‘மங்கிகேட்’ விவகாரத்தில் நான் முழுவதும் கட்டுப்பாட்டில் இல்லை.

இந்த விவகாரம் முடிந்தவிதம் எங்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. இது பெர்த்தில் நடைபெற்ற அடுத்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் விளையாடிய ஆட்டத்தில் வெளிப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்த நிலையில் தோல்வி அடைந்தோம். அதன் பின்னர் சில நாட்கள் நிலைமை மேலும் மோசமானது” என்றார்.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்