டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்க ஒப்பந்தம் அனுமதி- ஜப்பான் அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க ஒப்பந்தம் அனுமதிக் கிறது என ஜப்பான் நாடாளுமன் றத்தில் அமைச்சர் ஷெய்கோ ஹஷிமோடோ தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை மாதம் 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலை யில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடை பெறுமா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது.

கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் காரணமாக ஜப்பானில் மட்டும் இதுவரை 12 பேர் இறந்துள்ளனர். வேகமாக பரவி வரும் இந்த வைரஸால் ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக ஒலிம்பிக் தொடர்பான நிகழ்வுகள் கைவிடப்பட்டுள்ளன.

சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தற்போது குறைந்தது 70 நாடுகளில் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 90 ஆயிரம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3,100 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்றத்தில் நேற்று டோக்கியோ ஒலிம்பிக் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஷெய்கோ ஹஷிமோடோ பதில் அளித்து கூறுகையில், “சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமானது ஒலிம்பிக் போட்டியை 2020-ம் ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என்றே கூறுகிறது. இது போட்டியை ஒத்திவைக்க அனுமதிப்பதை உட்பொருளாகவே கொண்டுள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி ஜூலை 24-ம் தேதி போட்டி தொடங்குவதை உறுதி செய்ய எங்களால் முடித்த அனைத்தையும் செய்து வருகிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

29 mins ago

சினிமா

49 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்