தன் மனதில் நீங்கா இடம்பெற்ற விராட் கோலி விக்கெட்: வெர்னன் பிலாண்டர் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

2011-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான வெர்னன் பிலாண்டர், தன்னை தேர்வு செய்தவர்கள் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக விரைவில் உலக அரங்கில் தன் பவுலிங் திறமையை, ஸ்விங் திறமையை பதிய வைத்த ஒரு அரிய பவுலர்.

கிளென் மெக்ரா ரக ஓய்வு ஒழிச்சலற்ற 4வது ஸ்டம்பில் வீசி உள்ளேயும் வெளியேயும் பந்துகளை இழுத்து பேட்ஸ்மென்களை வம்புக்கு இழுத்து 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றி விரைவு 50 விக்கெட்டுக்கான உலக சாதனையை வைத்திருப்பவர். பிறகு விரைவில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென் ஆப்பிரிக பவுலர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவில் ஒருமுறை டேல் ஸ்டெய்ன் இல்லாமலேயே இவர் தொடரை வெல்ல மிக முக்கியமாகக் காரணமாகத் திகழ்ந்தார். இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டுடன் இவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடுகிறார், கோல்பாக் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து கவுண்டி ஆடச் செல்கிறார்.

இவர் தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அளித்த பேட்டியில், தான் வீழ்த்திய விக்கெட்டில் நீங்காமல் மனதில் இடம்பெற்ர விக்கெட் பற்றி குறிப்பிட்டார்.

அதில் அவர் கூறியதாவது, “பேட்ஸ்மென்களை பொறிவைத்து வீழ்த்துவது எனக்குப் பிடித்தமானது. 2018-ல் கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் விராட் கோலிக்கு 2 ஒவர்களாவது தொடர்ச்சியாக அவுட் ஸ்விங்கர்களை வீசினேன், அதன் பிறகு அவர் எதிர்பார்க்காத தருணத்தில் அதே லெந்தில் ஒரு பந்தை இன்ஸ்விங்கராக்க எல்.பி.ஆனார் விராட் கோலி. டாப் 4 வீரர்களை அவுட் செய்வதுதான் முக்கிய அம்சமாகும்.”

இந்த விராட் கோலி விக்கெட்தான் தன் மனதில் நீங்கா இடம்பெற்ற விக்கெட் என்று கூறுகிறார் வெர்னன் பிலாண்டர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

ஜோதிடம்

42 mins ago

ஜோதிடம்

57 mins ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்