இந்திய பாணியில்‘ஆரத்தி’ எடுத்த மகள்: தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்த அப்ரீடி- பழைய வீடியோ வெளியானது

By செய்திப்பிரிவு

இந்திய தொலைக்காட்சி ஷோ ஒன்றில் ஆரத்தி எடுக்கும் சீனைப் பார்த்து அதே போல் தன் மகளும் இந்திய பாணியில் ஆரத்தி எடுத்ததைக் கண்டு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உடனே வீட்டு டிவியை உடைத்தெறிந்ததாகக் கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் ‘கோபத்தில் டிவியை உடைத்ததுண்டா?’ என்று ஷாகிட் அப்ரீடியிடம் கேட்கிறார்.

அதற்கு அப்ரீடி சொன்ன பதில் இதோ:

ஒரேயொரு முறை வீட்டிலிருந்த டிவியை கோபத்தில் உடைத்திருக்கிறேன். அதுவும் என் மனைவியினால் உடைத்தேன். ஸ்டார் பிளஸ் சீரியல்கள் பிரபலமானவை, அதை என் மனைவி அதிகம் பார்ப்பார், ஆனால் நான் அவரிடம் தனியாக பார் குழந்தைகள் முன்னால் வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறேன்.

ஒருநாள் சீரியல் நடந்து கொண்டிருந்த போது என் அறையைவிட்டு நான் வெளியே வந்தேன் அப்போது என் மகள் அந்த ட்ராமாவில் வருவது போலவே ஆரத்தி எடுப்பதை ‘காப்பி’ செய்து கொண்டிருந்தாள்.

ஆத்திரத்தில் டிவியை சுவற்றில் தூக்கி அடித்தேன், என்றார்.

இந்த வீடியோவினை டிவிட்டர்வாசி ஒருவர் வெளியிட அது உடனே வைரலானது. இந்த ட்விட்டர் பக்கத்தில் ஷாகித் அப்ரீடியின் செயலுக்காக அவரை நெட்டிசன்கள் கடும் விமர்சனம் புரிந்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்