நியூஸி.க்கு அடி மேல் அடி! ஸ்டார்க் பந்தில் அடிபட்டு வலது கையில் எலும்பு முறிவு:  ட்ரெண்ட் போல்ட் விலகல்

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எந்த நேரத்தில் நியூஸிலாந்து அணி பயணம் மேற்கொண்டதோ தெரியவில்லை, அந்த அணிக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. இதில் அதன் முக்கிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அடுத்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

நியூஸிலாந்து இன்னிங்ஸ் இன்று கமின்ஸ், பேட்டின்சன், ஸ்டார்க் ஆகியோரின் வேகப்பந்து வீச்சையும், துல்லியத்தையும் பவுன்சர் தாக்குதலையும் சமாளிக்க முடியாமல் 148 ரன்களுக்குச் சுருண்டது.

இதில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இறங்கிய ட்ரெண்ட் போல்ட்டுக்கு பவுன்சர்களும் யார்க்கர்களும் வீசப்பட்டன. இதில் ஸ்டார்க் ஓவரில் ஒரு பந்து போல்ட்டின் வலது கை கிளவ்வில் பட்டுத் தெறித்தது.

இதனையடுத்து தேநீர் இடைவேளையின் போது போல்ட் எக்ஸ்-ரேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அதில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்ததால் அவருக்கு 4 வாரங்கள் ஓய்வு அளித்து சிட்னி டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார்.

மேலும் உடனடியாக அவர் நியூஸிலாந்து திரும்புகிறார் என்று நியூஸிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்