கிரெக் சாப்பல் சாதனையை உடைத்த ஸ்மித் 10ம் இடத்தில்: ஆஸ்திரேலியா 257/4

By இரா.முத்துக்குமார்

மெல்போர்னில் இன்று சாதனை ரசிகர்கள் கூட்டத்துக்கு இடையே (சுமார் 83000 ரசிகர்கள்) இடையே பாக்சிங் டே டெஸ்ட் தொடங்கியது. வழக்கமான மட்டை மெல்போர்ன் பிட்சாக இல்லாமல் பசுந்தரை ஆடுகளமானதால் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆனால் வரலாறு அவரது முடிவுக்கு எதிராக உள்ளது, மெல்போர்னில் முதலில் பீல்டிங் தேர்வு செய்த அணிகள் வெற்றி பெற்றதில்லை, ஆனாலும் ஆஸ்திரேலியாவை பெரிய அளவுக்கு எழும்ப விடாமல் முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்களை எடுத்துள்ளது.

நியூஸிலாந்தின் ஒரே கவலை நாளை ஸ்டீவ் ஸ்மித் 77 ரன்களுடன் களமிறங்குவார் என்பதே. ஸ்டீவ் ஸ்மித்துக்கு நீல் வாக்னரின் ஷார்ட் பிட்ச் பந்துகள் கடும் தொல்லைகள் கொடுத்தன, மற்றபடி நடுவர் நீஜல் லாங் கொடுத்த தொல்லைகள் தவிர வேறு எதையும் ஸ்மித் எதிர்கொள்ளவில்லை. நியூசிலாந்து கொஞ்சம் வைடாக வீசியது, மேலும் பேட்ஸ்மென் மட்டைக்கு நெருக்கமாக போதிய பீல்டர்களை நிறுத்தவில்லை.

இன்னொரு முனையில் ட்ராவிஸ் ஹெட் 25 ரன்களுடன் இருக்கிறார். நியூஸிலாந்து தரப்பி ஆச்சரியமளிக்கும் விதமாக மித வேக ஸ்விங் பவுலரான கொலின் டி கிராண்ட் ஹோம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற போல்ட் , வாக்னர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஸ்திரேலிய சாதனை:

முதல் நாள் ஆட்டத்தில் 192 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 77 நாட் அவுட்டாக இருக்கும் ஸ்மித், மற்றொரு ஆஸி. லெஜண்டான கிரெக் சாப்பல் சாதனையைக் கடந்தார்.

இன்று தன் 39வது ரன்னை அவர் எடுத்த போது 7,111 டெஸ்ட் ரன்களை எடுத்தார் ஸ்மித், கிரெக் சாப்பல் 87 டெஸ்ட் போட்டிகளில் 7,110 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஸ்மித் 72 டெஸ்ட் போட்டிகளில் 7,111 ரன்களை எடுத்து சாப்பல் சாதனையைக் கடந்தார்.

இதன் மூலம் அதிக டெஸ்ட் ரன்களில் ஆஸ்திரேலிய வீரர்களின் டாப் 10 பட்டியலில் 10ம் இடத்திற்கு வந்தார் ஸ்டீவ் ஸ்மித், கிரெக் சாப்பலின் சராசரி 53.86, ஸ்டீவ் ஸ்மித்தின் சராசரி 63.49 என்பது குறிப்பிடத்தக்கது.

லபுஷேன் அபாரம்:

இன்றைய தினம் ரோரி பர்ன்ஸ் போல்ட்டின் அருமையான வாசிம் அக்ரம் ரகப் பந்தில் பவுல்டு ஆகி டக் அவுட் ஆனார். வார்னர் 41 ரன்கள் எடுத்து சவுதியின் அருமையான ஒரு கை கேட்சுக்கு வாக்னரிடம் வீழ்ந்தார்.

61/2 என்ற நிலையில் லபுஷேன், ஸ்மித் இணைந்து ஸ்கோரை 144/2 என்று உயர்த்தினர். இதில் உணவு இடைவேளை வரை 67/1 என்றுதான் மந்தமாக இருந்தனர், ஆனால் அதன் பிறகு சாண்னர் பந்து வீச வர ஒரே ஓவரில் ஸ்மித், லபுஷேன் இருவரும் அவரை தலா 1 சிக்ஸ் அடித்து ஆடத் தொடங்கினர்.

லபுஷேன் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து டி கிராண்ட் ஹோம் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வந்த பந்து எதிர்பார்த்ததை விட கொஞ்சம் கூடுதலாக எழும்ப ஆடலாமா வேண்டாமா என்ற இரட்டை மன நிலையில் ஆடியதில் பந்து முழங்கையில் பட்டு பவுல்டு ஆனது.

ஸ்மித், மேத்யூ வேட் இணைந்து ஸ்கோரை மேலும் 72 ரன்கள் உயர்த்தி 216 ரன்களுக்குக் கொண்டு சென்ற போது 38 ரன்கள் எடுத்து ஆடிவந்த வேட், கொலின் டி கிராண்ட் ஹோம் வீசிய 122 கிமீ மித வேகப்பந்தை இன்ஸ்விங்கர் ஆகும் என்று ஆட நினைக்க பந்து லேட்டாக வெளியே ஸ்விங் ஆக எட்ஜ் எடுத்து வாட்லிங்கிடம் கேட்ச் ஆனது.

மேலும் சேதமேற்படாமல் ஸ்மித், ட்ராவிஸ் 257/4 என்று முடித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

சினிமா

55 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்