பாக்சிங் டே டெஸ்ட் போட்டி இன்று மெல்பர்னில் தொடக்கம்: ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து மோதல்

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி இன்று மெல்பர்ன் நகரில் தொடங்கவுள்ளது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரே லியா 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் இன்று தொடங்கவுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதை கிரிக்கெட் அணிகள் கவுரவமாகக் கருதுகின்றன. அதன்படி இன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் ஆஸ்திரேலி யா களமிறங்குகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் லபுஷான், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஜோ பர்ன்ஸ் ஆகியோர் சிறப்பாக விளை யாடினர். எனவே 2-வது போட்டி யிலும் அவர்கள் சிறப்பாக விளையாடுவர் என எதிர்பார்க்கப் படுகிறது. பந்துவீச்சிலும் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் அபாரமாக பந்துவீசினர். எனவே இந்தப் போட்டியிலும் அவர்களிடமிருந்து சிறப்பான பந்துவீச்சு வெளிப்படக்கூடும்.

அதேநேரத்தில் நியூஸிலாந்து, இந்த போட்டியை வென்று வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டிய நிலையில் உள்ளது. முதல் போட்டியில் ராஸ் டெய்லர் மட்டுமே சிறப்பாக விளையாடினார். கேப்டன் கேன் வில்லியம்ஸன், ஜீத் ராவல், டாம் லதாம், ஹென்றி நிக்கோல்ஸ் நீல் வாக்னர் ஆகியோரிடமிருந்து சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படவேண்டும்.

பவுலிங்கில் நீல் வாக்னர், டிம் சவுத்தி ஆகியோர் அபாரமாக பந்து வீசி வருகின்றனர்.

அணி விவரம்:

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ், மார்னஸ் லபுஷான், ஸ்டீவ் ஸ்மித், மாத்யூ வேட், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன், ஜேம்ஸ் பட்டின்சன், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன்.

நியூஸிலாந்து: டாம் லதாம், டாம் பிளன்டல், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், பி.ஜே.வாட்லிங், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சான்ட்னர், நீல் வாக்னர், டிம் சவுத்தி, டிரன்ட் பவுல்ட்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

32 mins ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுலா

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

மேலும்