கேப்டனாக ரஷீத் கான் நீக்கம்: ஆப்கான் கிரிக்கெட் வாரியம் அதிரடி  

By செய்திப்பிரிவு

மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக தோல்விகள் ஏற்பட்டதையடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அனைத்து வடிவங்களுக்கும் அஸ்கர் ஆப்கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஷீத் கான் கேப்டன்சியில் இந்தியாவில் நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் டெஸ்ட் தொடரையும் ஆப்கானிஸ்தான் தோற்றது. இதனையடுத்து வெற்றிகர கேப்டனாகக் கருதப்படும் அஸ்கர் ஆப்கானிடமே கேப்டன்சி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரஷீத் கான் துணைக் கேப்டனாக பதவியிறக்கம் பெற்றுள்ளார். உலகக்கோப்பை டி20 தொடர் வரை இவர் வைஸ் கேப்டனாக இருப்பார் என்று தெரிகிறது.

இது தொடர்பாக ரஷீத் கானிடம் பேசிய ஆப்கன் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் அதன் பிறகே இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த ஆண்டு ஜூலை மாதம்தான் ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

முன்னதாக அஸ்கர் ஆப்கானிடம்தான் கேப்டன்சி இருந்தது. உலகக்கோப்பைக்கு முன்னதாக இவர் தேவையில்லாமல் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது அணியில் பெரிய கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஷீத் கான் குறுகிய காலத்தில் நீக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

மேலும்