டெஸ்ட் போட்டி: 10 விக்கெட் வீழ்த்திய 140 கிலோ எடையுள்ள கார்ன்வால்: ஆப்கானை ஊதித்தள்ளிய மே.இ.தீவுகள் அணி

By க.போத்திராஜ்

140 கிலோ உடல் எடை கொண்ட ரக்கீம் கார்ன்வாலின் 10 விக்கெட்டால் லக்னோவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை மேற்கிந்தியத்தீவுகள் அணி வென்றுள்ளது.

ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை 3-0 என்ற கணக்கில் வென்ற மே.இ.தீவுகள் அணி, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மே.இ.தீவுகள் வீரர் ரக்கீம் கார்ன்வால் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 27-ம் தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டி மூன்றாவது நாள் காலையிலேயே முடிவுக்கு வந்துள்ளது.

ஆஃப் ஸ்பின்னர்-ஆல்ரவுண்டரான ரக்கீம் கார்ன்வாலுக்கு 24 வயதுதான் ஆகிறது. மே.இ.தீவுகளில் உள்நாட்டு கிரிக்கெட்டில் லீவர்ட் தீவுகள் அணிக்காக ஆடியவர். கரிபீயன் பிரிமியர் லீக் டி20 போட்டிகளில் ஆண்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ் அணிக்கு ஆடுகிறார். முதல் தர கிரிக்கெட்டில் 25 போட்டிகளில் 125 விக்கெட்டுகளை 24 என்ற சராசரியில் இவர் வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணி கடந்த முறை மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சென்றிருந்த போது அந்நாட்டு வாரியத்தலைவர் அணிக்கு எதிராக ஆடியது. அப்போது வாரியத்தலைவர் அணியில் ஆடிய ’ஜெயண்ட்’ ரக்கீம் கார்ன்வால் 41 ரன்களை எடுத்ததோடு, புஜாரா, கோலி, ரஹானே உட்பட 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

2007 உலகக்கோப்பையில் இத்தகைய கவனத்தை ஈர்த்த பெர்முடா அணி வீரர் டிவைன் லெவராக்கை பலரும் அதிசயத்துடன் பார்த்திருப்பார்கள், அவர் அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டு ஸ்லிப்பில் பாய்ந்து பிடித்த கேட்சை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் லெவராக்கின் உடல் எடை அப்போது 122 கிலோதான். இப்போது 140 கிலோ எடையுடன் ரஹ்கீம் கார்ன்வால் பெர்முடா வீரரை விஞ்சிவிட்டார்.

முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 68.3 ஓவர்களில் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மே.இ.தீவுகள் அணி 83.3 ஓவர்களில் 277 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 90 ரன்கள் முன்னிலை பெற்றது. மே.இ.தீவுகள் அணியில் கேம்பெல் 55 ரன்களும், புரூக்ஸ் சதம் அடித்து 111 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதேபோல முதன்இன்னங்ஸில் சிறப்பாகப் பந்துவீசிய மே.இ.தீவுகள் அணி வீரர் ரக்கீம் கார்ன்வால், 25.3 ஓவர்கள் வீசி 5 மெய்டன்கள், 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2-வது இன்னிங்ஸை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி மே.இ.தீவுகள் வீரர்களின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 83.3ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-வது நாள் ஆட்டமான நேற்றைய ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ரன்Kள் சேர்த்திருந்தது.

மூன்றாவது நாளான இன்று காலை ஆட்டம் தொடங்கியவுடன் ஒருமணிநேரத்தில் மீதமிருந்த 3 விக்கெட்டுகளையும் 11 ரன்களுக்கு பறிகொடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. இந்த 3 விக்கெட்டுகளையும் ஹோல்டர் வீழ்த்தினார்.

2-வது இன்னிங்ஸில் மே.இ.தீவுகள் தரப்பில் கார்ன்வால், ஹோல்டர், சேஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழத்தினர். இரு இன்னிங்ஸிலும் சேர்த்து கார்ன்வால் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 31 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மே.இ.தீவுகள் அணி இன்று காலை 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெய்ட் 8 ரன்னில் அமிர் ஹம்சாவிடம் முதல் விக்கெட்டை பறிகொடுத்தார். கேம்பெல் 19, ஹோப் 6 ரன்களுடன் இறுதிவரைஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

28 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்