நியூஸி. இன்னிங்ஸ் வெற்றி

By செய்திப்பிரிவு

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மவுன்ட் மவுங்கனுயில் நடைபெற்ற இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதேவேளையில் நியூஸிலாந்து 9 விக்கெட்கள் இழப்புக்கு 615 ரன் கள் குவித்து டிக்ளேர் செய்தது. பிஜே வாட்லிங் 205 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 126 ரன்கள் விளாசினர். 2 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 27.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது.

கடைசி நாளான நேற்று நெய்ல் வாக்னரின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சீரான இடை வெளியில் ஆட்டமிழந்து வெளி யேறினர். ஜோ ரூட் 11, ஜோ டென்லி 35, பென் ஸ்டோக்ஸ் 28, போப் 6, ஜாஸ் பட்லர் 0, ஜோப்ரா ஆர்ச்சர் 30, ஸ்டூவர்ட் பிராடு 0 ரன்களில் நடையை கட்ட இங்கிலாந்து அணி 96.2 ஓவர்களில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஒரு கட்டத்தில் 121 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்த இங்கிலாந்து அணி கடைசி 6 விக்கெட்களை 76 ரன்களுக்கு தாரை வார்த்தது.

நியூஸிலாந்து அணி சார்பில் நெய்ல் வாக்னர் 5, மிட்செல் சாண்ட் னர் 3 விக்கெட்கள் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள் விளாசிய நியூஸிலாந்தின் பிஜே வாட்லிங் தேர்வானார். இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் ஹாமில்டன் நகரில் வரும் 29-ம் தேதி தொடங்கு கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

ஓடிடி களம்

40 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்