ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு இல்லை: வாய்ப்பளிக்காமலேயே சஞ்சு சாம்சன் நீக்கம்- இந்திய அணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மே.இ.தீவுகளுக்கு எதிரான உள்நாட்டு டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளார்.

தேவையில்லாமல் எங்கிருந்தோ, எந்தவித மேட்ச் பிராக்டீசும் இல்லாத, கேதார் ஜாதவ்வை ஒருநாள் அணியில் தேர்வு செய்துள்ளனர். வாய்ப்பளிக்காமலேயே சஞ்சு சாம்சன் ஒதுக்கப்பட்டுள்ளார். அதே போல் மகா தடவலாக ஆடிவரும் ஷிகர் தவண் இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளது டூ மச்.

அதே போல் ஒருநாள், டி20 அணிக்கு விராட் கோலிதான் கேப்டனாக இருப்பார். டி20 அணியில் மொகமட் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஒரு நாள் அணியில் புதுமுக வீரர் ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார்.

15 வீரர்கள் கொண்ட டி20 அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ்வும் இடம்பெற்றுள்ளார். டி20 ஹாட்ரிக் எடுத்த தீபக் சாஹர் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார், இவர் கடைசியாக ஒரேயொரு ஒருநாள் போட்டியில் ஆப்கானுக்கு எதிராக 2018-ல் ஆடியது குறிப்பிடத்தக்கது.

டி20 அணி: விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவண், ரிஷப் பந்த், மணீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் அய்யர், ஷிவம் துபே, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், புவனேஷ் குமார், ஷமி.

ஒருநாள் அணி: விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவண், ரிஷப் பந்த், மணீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் அய்யர், ஷிவம் துபே, ஜடேஜா, கேதார் ஜாதவ், சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், மொகமது ஷமி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்