பர்ன்ஸ், டென்லி, ஸ்டோக்ஸ் போராட்ட அரைசதம்: பழைய டெஸ்ட் பாணியில் இங்கிலாந்து 

By இரா.முத்துக்குமார்

மவுண்ட் மாங்குனியில் நடைபெறும் நியூஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய முடிவெடுத்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் நாள் ஆட்ட முடிவில் 114 பந்துகளைச் சந்தித்து 9 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்த பென் ஸ்டோக்ஸும், ஓலி போப் 18 ரன்களுடனும் கிரீசில் இருக்கின்றனர்.

முன்னதாக ரோரி பர்ன்ஸ் 138 பந்துகளில் 52 ரன்களையும் ஜோ டென்லி 181 பந்துகளில் 74 ரன்களையும் எடுத்தனர். ஆனால் இவர்கள் அனைவரையும் விட நியூஸிலாந்தின் உலகக்கோப்பை விரோதி பென் ஸ்டோக்ஸ் இயல்பான ஆட்டத்தை ஆடினார், அதுவும் 2வது புதிய பந்தை எடுத்தவுடன் நியூஸி. இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்டை தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.

ஸ்விங், வேகம் எதுவும் இல்லாத ஒரு ஆடுகளத்தில் இங்கிலாந்து பழைய டெஸ்ட் மேட்ச் பாணியில் நின்று நிதானமாக ஆடியது, அறிமுக வீரர் டோமினிக் சிப்லி 63 பந்துகளில் 22 ரன்களை எடுக்க முதல் விக்கெட்டுக்காக 52 ரன்கள் சேர்க்கப்பட்டது. சிப்லி தன் டெஸ்ட் முதல் பந்தையே பவுண்டரி விளாசினார், பிறகு லெக் திசையில்ன்தட அனைத்து ரன்களையும் எடுத்து ஆடி வந்த போது கொலின் டி கிராண்ட் ஹோம் பந்தை ராஸ் டெய்லரிடம் எட்ஜ் செய்து வெளியேறினார். பர்ன்ஸ் 10 ரன்களில் காலியாகியிருப்பார், ஆனால் போல்ட் பந்தில் ஆன எட்ஜ்ஜிற்கு நடுவர் நாட் அவுட் என்றார், நியூசிலாந்து ரிவியூ செய்யவில்லை. ஆனால் ரீப்ளேயில் எட்ஜ் தெரிந்தது.

டென்லி தன் முதல் ரன்னை எடுக்க 21 பந்துகள் எடுத்துக் கொண்டார், நீல் வாக்னரிடம் தொடர்ந்து பீட் ஆனாலும் அவர் வீசிய 2 ஷார்ட் பிட்ச் பந்துகளை பவுண்டரிக்கு முறையாக அனுப்பி வைத்தார், வாக்னர் வேகத்தில் பர்ன்ஸ் ஒருமுறை ஹெல்மெட்டில் வாங்கினார், பிறகு 37-ல் பர்ன்ஸுக்கு கேட்சையும் விட்டனர் நியூஸிலாந்து பீல்டர்கள். பிறகு 44 ரன்களில் இருந்த போது எல்.பி.தீர்ப்பில் ரிவியூவில் தப்பினார் பர்ன்ஸ், இதனையடுத்து அவர் 135 பந்துகளில் போராட்ட அரைசதத்தை எடுத்தார்.

ஆனால் கொலின் டி கிராண்ட் ஹோம் அவரது அதிர்ஷ்டத்தை தொடர முடியாமல் அடுத்த ஓவரிலேயே பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஜோ ரூட் 21 பந்துகள் முதல் ரன்னிற்காக எடுத்து கொண்டு கடைசியில் 2 ரன்களில் வாக்னரிடம் வெளியேறி ஏமாற்றம் அளிக்க இங்கிலாந்து 120/3 என்று ஆனது.

ஸ்டோக்ஸ் நிதானமாகத் தொடங்கி 15 பந்துகள் எடுத்துக் கொண்டார் தன் முதல் ரன்னிற்கு, மறுமுனையில் ஜோ டென்லி பவுண்டரி மூலம் 136 பந்துகளில் அரைசதம் கண்டார்.

மிட்செல் சாண்ட்னர் அறிமுகம் செய்யப்பட்டவுடன் ஜோ டென்லி எக்ஸ்ட்ரா கவர் மேல் ஒரு பவுண்டரியும் பிறகு ஒரு நேர் சிக்சும் விளாச ஸ்டோக்ஸ், டென்லி கூட்டணி அரைசதம் கண்டது. வாக்னரை ஸ்டோக்ஸ் 2 பவுண்டரிகளைத் தொடர்ச்சியாக அடித்தார். ஸ்டோக்ஸ் கடைசியில் ஒரு கேட்ச் கொடுத்தார் ஆனால் அது விடப்பட்டது.

கடைசியில் இங்கிலாந்து 241/4 என்று முடிந்தது. நியூஸிலாந்து தரப்பில் கொலின் டி கிராண்ட் ஹோம் 2 விக்கெட்டுகளையும் சவுதி, வாக்னர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்