பகலிரவு டெஸ்ட்டுக்கு  கோலியை சம்மதிக்க வைக்க கங்குலி எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு தெரியுமா?

By செய்திப்பிரிவு

கொல்கத்தா, பிடிஐ

இதுநாள் வரை பகலிரவு டெஸ்ட் போட்டியை வேண்டாம் என்று ஒதுக்கி வந்த இந்திய அணி கங்குலி பிசிசிஐ தலைவரானவுடன் கொல்கத்தாவில் ஆட சம்மதித்துள்ளது பலருக்கும் ஆச்சரியமளித்திருக்கலாம்.

ஆனால் கங்குலி போன்ற ஆளுமைக்கு இது சர்வ சாதாரணம் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

கோலியிடம் தான் இது பற்றி பேசிய போது நடந்ததை விவரித்த கங்குலி, “எனக்கு உள்ளபடியே ஏன் இத்தனை நாட்களாக பகலிரவு டெஸ்ட் போட்டியை நாம் ஆடவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. நான் விராட் கோலியை ஒரு மணி நேரம் சந்தித்தேன். என் முதல் கேள்வியே நாம் ஏன் பகலிரவு டெஸ்ட் வைக்கக் கூடாது என்றேன். மூன்றே விநாடிகளில் கோலி ‘ஊம், ஏன் வைக்கக் கூடாது, விளையாடுவோம்’ என்று உடனடியாகவே அவர் ஏற்றுக் கொண்டு விட்டார்.

கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது எனக்கு உள்ளபடியே தெரியவில்லை. ஆனால் விராட் கோலிக்கு பகலிரவு டெஸ்ட் போட்டி ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் காலியான, பார்வையாளர்கள் அற்ற ஸ்டேடியம் கோலிக்கும் சரியானதாகத் தெரியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னேற்ற பயன்படும் என்றால் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்தலாம் என்றார்.

டி20 என்றால் மைதானம் நிரம்பி வழிகிறது, டெஸ்ட் கிரிக்கெட்டையும் மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். இந்தியாவுக்கு இது தொடக்கம் மட்டுமே. இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியையும் மேலும் விறுவிறுப்பாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

என்னுடைய 100வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி, முதல் நாள் கூட்டம் 70,000 பேர்! ஆஷஸ் தொடரிலும் கூட நாம் நல்ல ரசிகர் கூட்டத்த்தைப் பார்க்கிறோமே” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்