விராட் கோலிக்கு அனைத்தையும் எளிதாக்கவே நான் இங்கு இருக்கிறேன், கடினமாக்க அல்ல: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

By செய்திப்பிரிவு

மும்பை, பிடிஐ

“இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி மிக முக்கியமான ஒரு வீரர்” என்று கூறும் சவுரவ் கங்குலி, தான் பிசிசிஐ தலைவராக இருக்கும் காலக்கட்டத்தில் அவருக்கு அனைத்தையும் எளிதாக்குவதற்குத்தான் இருக்கிறேன் என்றும் கடினமாக்க அல்ல என்றும் பிசிசிஐ புதிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

“நாளை நான் விராட் கோலியுடன் பேசுகிறேன். இந்திய கிரிக்கெட்டில் கேப்டனாக அவர் மிக முக்கியமான ஒரு நபர், நான் அந்த வழியில்தான் பார்க்கிறேன், நான் ஏற்கெனவே கூறியது போல் சாத்தியமாகக்கூடிய வழிகளிலெல்லாம் அவருக்கு முழு ஆதரவு அளிப்போம். இந்திய அணியை உலகிலேயே சிறந்த அணியாக உருவாக்க அவர் விரும்புகிறார். உள்ளபடியே கூற வேண்டுமெனில் கடந்த 3-4 ஆண்டுகளாக இந்திய அணியினர் கிரிக்கெட் ஆட்டங்கள் அதனை சிறந்த அணியென்றே வர்ணிக்க வைக்கிறது.

அனைத்தும் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். அவர்களுக்கு அனைத்தையும் எளிதாக்க வேண்டியதுதான் என் வேலை. கடினமாக்குவதல்ல. அனைத்தும் ஆட்டத்திறன் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படும்.

திறமைதான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை முடிவு செய்யும். இதில் விராட் கோலிதான் முக்கியமான நபர். அவருக்கு ஆதரவு அளிப்போம், அவர் கூறுவதைக் கவனிப்போம். நானே கேப்டனாக இருந்ததால் எனக்குப் புரியும். பரஸ்பர மரியாதை அங்கு உண்டு, கருத்துகளும் விவாதங்களும் உண்டு, ஆட்டத்தின் நன்மைக்கான அனைத்தையும் செய்வோம்.

ஆம், உலகக்கோப்பையை வெல்லவில்லை என்கிறீர்கள், ஒவ்வொரு முறையும் உலகக்கோப்பையை வெல்ல முடியாது. கோலியை ஆதரிப்போம். அவர் என்ன விரும்புகிறாரோ அதைக் கொடுத்து இந்திய கிரிக்கெட் முன்னேற்றத்தை உறுதி செய்வோம்.

வடிவத்திற்கேற்ப கேப்டன்சியில் மாற்றம் என்ற கேள்வி இப்போது எழவில்லை. இந்தியா இப்போது வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது இந்திய அணி உலகின் தலைசிறந்த அணியாகும்.

கிரிக்கெட் மைதானங்கள் விவகாரத்தில் நம்மிடையே நிறைய மாநிலங்கள், நிறைய மைதானங்கள் உள்ளன, எனவே இது தொடர்பாகவும் அவருடன் அமர்ந்து பேசுவோம், அவர் விரும்புவதைச் செய்யலாம்.

நான் இருக்கும் வரை அனைவருக்கும் உரிய மரியாதை உண்டு. சாம்பியன்கள் அவ்வளவு விரைவில் முடித்து விட மாட்டார்கள். தோனியின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. தன் கரியர் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பது தெரியவிலை. எனவே இதனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

கிரிக்கெட்டின் கிரேட்களில் அவர் ஒருவர் தோனியைக் கொண்டிருப்பதில் இந்தியா பெருமையடைகிறது. அவர் என்ன செய்திருக்கிறார் என்று உட்கார்ந்து நீங்கள் யோசித்தால் கூட நீங்கள் ‘வாவ், எம்.எஸ்.தோனி’ என்றே கூறுவீர்கள்.

நான் இருக்கும் வரை அனைவருக்கும் உரிய மரியாதை சேர்ப்பிக்கப்படும் அதில் மாற்றமில்லை.

இவ்வாறு கூறினார் பிசிசிஐ தலைவர் கங்குலி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்