தன்னை அணியிலிருந்து நீக்குவதற்கான வாய்ப்பை ரிஷப் பந்த் அளிக்கக் கூடாது: கபில் தேவ்

By செய்திப்பிரிவு

தோனி ஓய்வு பற்றிய பேச்சுக்கள் பின்புலத்திற்குச் செல்ல தற்போது இளம் வீரர் ரிஷப் பந்த் குறித்து அனைவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து அவருக்கு கடும் நெருக்கடி அளிக்கின்றனர்.

இந்தப் பட்டியலில் கபில்தேவும் இணைந்தார், அவர் கூறும்போது, “பந்து மட்டையில் இனிமையாகப் படும் அந்தத் தருணத்துக்காக ரிஷப் பந்த் காத்திருக்க வேண்டும், என்ன அவசரம்? அவரிடம் திறமையும் இளமையும் உள்ளது, பொறுமை என்னும் ஒரு புள்ளியில்தான் அவர் பணியாற்ற வேண்டியுள்ளது. வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு நூலளவுதன இடைவெளி.

ஷாட்டை கனெக்ட் செய்தால் ஹீரோ, முடியவில்லை எனில் அதே ஷாட் உன் பகைவனாகி விடும். எப்படி ஆடுவது என்ற முடிவு கடினமானதுதான், ஆனால் தாமதமாவதற்குள் அவர் முடிவெடுக்க வேண்டும். அவர் நினைத்த நேரத்தில் பவுண்டரிகள், சிக்சர்களை அடிக்கக் கூடியவர்தான், ஆனால் சில வேளைகளில் கொஞ்சம் நிதானித்து சாதுரியமாக முடிவெடுக்க வேண்டும்.

நானும் ஒரு டெஸ்ட் போட்டியில் (இங்கிலாந்துக்கு எதிராக 1984) நீக்கப்பட்டேன். ஆனால் நான் யாரையும் குறை கூறவில்லை, காரணம் நீக்குவதற்கான காரணத்தை நான் தான் ஏற்படுத்திக் கொடுத்தேன், அதேபோல் பந்த் தன்னை நீக்குவதற்கான காரணங்களை வழங்கக் கூடாது. அவரிடம் வெற்றிக்கான உந்துதல் உள்ளது, காலம்தான் விரைவில் அவரை மாற்றும், நாம் அவரை ஆதரிப்போம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

23 mins ago

சினிமா

19 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

43 mins ago

க்ரைம்

49 mins ago

க்ரைம்

58 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்