உலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்:  வரலாறு படைத்தார் அமித் பங்கல்

By செய்திப்பிரிவு

ஈகாடெரின்பர்க் (ரஷ்யா), பிடிஐ

ரஷ்யாவில் நடைபெற்ற உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர் அமித் பங்கலின் அபார ஆட்டங்கள் அவருக்கு முதல் முறையாக உலகக் குத்துச் சண்டையில் ஆடவர் பிரிவில் வெள்ளி வென்ற இந்தியர் என்ற தகுதியைப் பெற்றுத்தந்துள்ளது.

இறுதிப்போட்டியில் வென்று தங்கம் வெல்வார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்த நிலையில் இன்று 52 கிலோ பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் ஒலிம்பிக் தங்கம் வென்ற ஷகோபிதின் ஸோய்ரோவிடம் துரதிர்ஷ்டவசமாகத் தோல்வி தழுவினார். பங்கல் 0-5 என்று தோல்வி தழுவினாலும் இந்த ஸ்கோர் லைன் அவரது கடின உழைப்பைத் தெரிவிக்காது.

முன்னதாக மணீஷ் கவுஷிக் 63 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றதையடுத்து உலகக் குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் முதல் முறையாகக் கிடைத்துள்ளது.

பங்கலை விடவும் உயரம் அதிகமான, நல்ல உடற்கட்டு உடையவரான ஸோய்ரோவிடம் அவர் தோற்றாலும், தன்னால் முடிந்த வரை போராடினார், ஆனால் இவரது பஞ்ச்கள் சரியாகக் கைகூடாமல் போனது. இருப்பினும் ஆசிய விளையாட்டு தங்கம் வென்ற அமித் பங்கல் வெள்ளி வென்று வரலாறு படைத்துள்ளார் அமித் பங்கல்.

இந்தத் தொடரில் ஸோய்ரோவ் தரநிலையில் இல்லாதவர் என்றாலும் எப்போதும் இவருடன் மோதுவது கடினமான சவாலே.

ஆனால் அமித் பங்கல் இறுதிக்குள் நுழைந்ததன் மூலம் இறுதிப் போட்டிகளுக்குள் நுழைந்த 9 நாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவையும் நுழைத்துள்ளார் அமித் பங்கல்.
உஸ்பெகிஸ்தான் அணி வீரர்கள் 4 பேர் இதுவரை இறுதிக்குள் நுழைந்துள்ள வகையில் முதலிடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்