தொடர்ச்சியாக 7 சிக்சர்கள்: ஜிம்பாப்வேயை உரித்தெடுத்த ஆப்கனின் அபார வெற்றி

By செய்திப்பிரிவு

வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்று ஆடும் டி20 முத்தரப்பு சர்வதேச தொடர் டாக்காவில் நடைபெற்று வருகிறது, இதில் முதல் போட்டியில் நெருக்கமாக வங்கதேசத்துடன் தோற்ற ஜிம்பாப்வே, 2ம் போட்டியில் ஆப்கானிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டது.

ஆப்கானின் பெரிய ஹிட்டிங் முன்பாக ஜிம்பாப்வே பவுலர்கள், பீல்டர்கள் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.

ஆப்கான் வீரர்கள் நஜ்புல்லா ஸத்ரான், மொகமது நபி இணைந்து தொடர்ச்சியாக 7 சிக்சர்களை விளாசினர். ஆப்கான் அணி ஜிம்பாப்வேயை 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்களைக் குவிக்க ஜிம்பாப்வே அணி 169/7 என்று முடிந்து இலக்கை ஒருபோதும் எட்டாத நிலையில்தான் ஆடியது.

நஜ்புல்லா ஸத்ரான் 30 பந்துகளில் தனது டி20 சிறந்த இன்னிங்சில் 69 ரன்களை விளாசினார். இதில் 6 சிக்சர்கள், முகமது நபி 18 பந்துகளில் 38 ரன்களை எடுக்க இருவரும் 5வது விக்கெட்டுக்காக 107 ரன்களைச் சேர்த்தது ஜிம்பாப்வேயை பரிதாப நிலைக்குக் கொண்டு சென்றது.

90/4 என்று இருந்த ஆப்கான் அணியை மீட்டது முகமது நபி, ஸத்ரான் ஆகியோர்தான் இவர்கள் கூட்டணியில் முக்கியமான அந்தத் தருணம் 17 மற்றும் 18வது ஓவர்களில் நிகழ்ந்தது.

டெண்டாய் சதாரா ஓவரில் நபி 4 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்தார், அடுத்த ஓவரை நெவில் மாட்சிவா வீச ஸத்ரான் முதல் 3 பந்துகளை சிக்சர்களுக்கு விரட்ட தொடர்ச்சியாக 7 சிக்சர்களை விளாசினர். அடுத்த பந்து வைடாக அமைய, அடுத்த பந்தையும் ஸத்ரான் தொடர் 8வது சிக்சருக்கு தூக்கி அடித்தார், ஆனால் பாயிண்ட் பவுண்டரியில் பந்து எல்லைக்கோட்டுக்கு சற்று அருகில் பிட்ச் ஆகி 4 ரன்களானது ரிவியூவில் தெரிந்தது.

முன்னதாக தொடக்க வீரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் 43 ரன்கள் எடுத்தது அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது, ஆனால் இவர் சான் வில்லியம்சின் (2-16) அருமையான பந்து வீச்சில் எல்.பி.ஆனார்.

ஜிம்பாப்வே விரட்டல் 4ம் ஓவரில் சிக்கலுக்குள்ளானது, இந்த ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்தது. ப்ரெண்டன் டெய்லரை 27 ரன்களுக்கும் சான் வில்லியம்சை டக்கிலும் வெளியேற்றினார் ஃபரீத் அகமட். கேப்டன் மசகாட்ஸா ஏற்கெனவே ரன் அவுட் ஆனதையடுத்து ஜிம்பாப்வே 30/3 என்று சரிந்தது. ஆனால் ரெஜிஸ் சபாக்வா போராட்டத்தை ஆப்கான் அணிக்கு எதிராக கொண்டு சென்று 42 ரன்களை ஆக்ரோஷமாக எடுத்தார். ஆனால் ரஷீத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜிம்பாப்வே இலக்கை விரட்டும் நிலையிலேயே இல்லை.

வங்கதேச அணி, ஆப்கான் அணியை இன்று சந்திக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

39 mins ago

விளையாட்டு

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்