சத சாதனையில் கிறிஸ் கெய்லுக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய வீரர்

By செய்திப்பிரிவு

டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் வரிசையில் கிறிஸ் கெய்ல் நம்பர் 1 இடம் என்றால் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளிங்கர் 2ம் இடத்துக்கு வந்துள்ளார்.

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் தொடரில் 39 வயது ஆஸி. வீரர் மைக்கேல் கிளிங்கர் தனது 8வது சதத்தை எடுத்தார்.

கெண்ட் அணிக்கு எதிரான டி20 போட்டியில் குளஸ்டர்ஷயர் அணிக்கு ஆடும் மைக்கேல் கிளிங்கர் 65 பந்துகளில் 102 ரன்களை விளாச குளஸ்டர் ஷயர் அணி கெண்ட் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

தொடக்க வீரர் ஆன மைக்கேல் கிளிங்கர் 39 வயது ஆனதால் இந்த டி20 பிளாஸ்ட் தொடருடன் ஓய்வு அறிவிக்கவிருக்கிறார். ஆகவே 21 டி20 சதங்கள் எடுத்துள்ள கிறிஸ் கெய்லை இவர் முறியடிக்க வாய்ப்பேயில்லை, ஆனாலும் 8 டி20 சதங்களுடன் கிளிங்கர் 2ம் இடத்தில் இருக்கிறார்.

ஏரோன் பிஞ்ச், பிரெண்டன் மெக்கல்லம், வார்னர், லுக் ரைட், ஆகியோர் 7 சதங்கள் எடுத்துள்ளனர், ரோஹித் சர்மா 6 சதங்கள் எடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

39 mins ago

க்ரைம்

43 mins ago

இந்தியா

52 mins ago

விளையாட்டு

53 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்