டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மொகமது அமீர் ஓய்வு

By செய்திப்பிரிவு

கராச்சி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமீர் அறிவித்துள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான மொக மது அமீர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதே வேளையில் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என வும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மொக மது அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரம்பரிய வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியது பெரு மையாக உள்ளது. இருப்பினும் தற்போது நீண்ட வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இதனால் குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் என்னால் கவனம் செலுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

27 வயதான மொகமது அமீர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு எதிராக காலே நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 119 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் மொகமது அமீர் 15 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார்.

மொகமது அமீர் கூறுகையில், “இது எளிதான முடிவு இல்லை. சில காலமாகவே இதைப் பற்றி நான் யோசித்து வந்தேன். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விரைவில் தொடங்க உள்ள நிலையில் மிகவும் உற்சாகமான இளம் வேகப்பந்து வீச்சாளர்களை வாரி யம் பெருமைப்படுத்த உள்ளது. இதனால் இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுவதற்கு பொருத்தமான நேரமாக இருக்கும். பாகிஸ்தான் அணிக்காக தொடர்ந்து விளையாடுவது எனது இறுதி விருப்பமாகவும், நோக்க மாகவும் உள்ளது. அடுத்த ஆண்டு ஐசிசி டி 20 உலகக் கோப்பை உட்பட அணிக்கு வரவிருக்கும் சவால்களில் பங்கெடுக்க சிறந்த உடற் தகுதியுடன் இருக்க நான் முயற்சிப்பேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்