2-ம் இடத்தில் இருக்கும் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தோனேசியா ஓபன் இறுதியில் பி.வி.சிந்து 

By செய்திப்பிரிவு

இந்தோனேசியா ஓபன் பாட்மிண்டன் தொடர் அரையிறுதியில் 2ம் நிலையில் உள்ள சீன வீராங்கனை சென் யு ஃபெய் என்பவரை 21-19, 21-10 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 2019-ம் ஆண்டின் முதல் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து. 

ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் 4ம் நிலை ஜப்பான் வீராங்கனை யாமகுச்சியுடன் மோதுகிறார் சிந்து. 

முதல் செட்டில் சீன வீராங்கனை சென் யு ஃபெய் 18-14 என்று முன்னிலை வகித்தார், ஆனால் அப்போதுதான் திடீர் எழுச்சி பெற்ற பி.வி.சிந்து அபாரமான சில ஷாட்களினால் வென்று 18-18 என்று சமன் செய்தார். 

சிந்துவின் சக்தி வாய்ந்த ஸ்மாஷ் மற்றும் துல்லியமான ட்ராப் ஷாட்களுக்கு சீன வீராங்கனையிடம் பதில் இல்லை. முதல் செட்டை 21-19 என்று கைப்பற்றினார் சிந்து. 

2வது செட்டிலும் சீன வீராங்கனை ஃபெய் 4-0 என்று முன்னிலை வகித்தார். ஆனால் இந்த முறையும் சிந்துவின் சமயோசிதமான சில ஷாட்களுக்கு ஃபெயிடம் பதில் இல்லாமல் போக 11-8 என்று சிந்து முன்னிலை பெற்றார். 

இதன் பிறகு முழுக்க முழுக்க சிந்துவின் ஆதிக்கம்தான், ஃபெய்யின் சர்வை அபாரமாக எதிர்கோண்ட சிந்து, எதிர்த்தாக்குதலில் சிறந்து விளங்க அதன் பிறகு 2 புள்ளிகளியே பெற்று 21-10 என்று தோல்வியடைந்தார் சீன வீராங்கனை. 

சென் யு ஃபெய் ஷாட்களில் சிலபல தவறுகளை இழைத்தார், இதனை சிந்து தனக்குச் சாதகமாக மாற்றி கொண்டார். 

கடைசியில் சீன வீராங்கனை தோல்வியினால் அதிர்ச்சியடைந்தார். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 mins ago

விளையாட்டு

57 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்