இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு

By பிடிஐ

பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப் நகரில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடரில் 5-வது இடத்தைப் பிடித்த இந்திய மகளிர் ஹாக்கி அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப் பைப் பிரகாசப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணி பெல்ஜியத்தில் இருந்து நேற்று நாடு திரும்பியது. டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களுக்கு தாரை தப்பட்டையுடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹாக்கி இந்தியா நிர்வாகிகள், ஊடகங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் திரண்டிருந்து அவர்களை வரவேற்றனர்.

அப்போது இந்திய அணியின் பயிற்சியாளர் சி.ஆர். குமார் கூறியதாவது: உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் முதல் 5 இடங்களைப் பிடித்து ஒலிம்பிக் வாய்ப்பை தக்கவைப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஹாக்கி லீக்கில் கடைசி இரு ஆட்டங்கள் எங்களுக்கு மிக முக்கியமானவையாகும்.

பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளும், நெருக்கடியும் இருந்தபோதும்கூட இந்திய வீராங்கனைகள் பதற்றமின்றி விளையாடினார்கள். அதிலும் இளம் வீராங்கனைகள் மிக நன்றாக விளையாடினார்கள். இந்தியாவில் மகளிர் ஹாக்கிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை மிகுந்த நம்பிக்கை யோடு சொல்லிக்கொள்கிறேன் என்றார்.

1980-ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய மகளிர் அணி, அதன்பிறகு இப்போதுதான் ஒலிம்பிக் வாய்ப்பை நெருங்கி யுள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்